Jan 9, 2026 - 10:55 AM -
0
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்துள்ளது.
அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை மேல் நீதிமன்றில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரோடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது.
தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை இன்று (9) காலை 10.30 மணி வரை ஒத்திவைத்தார்.
அதன்படி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை நிறுவனத்தின் நடவடிக்கையைும் ரத்து செய்து சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி ஜனநாயகன் படத்திற்கு யு.ஏ சான்றிழல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனநாயகன் படத்துக்கு எதிரான முறைப்பாடு ஆபத்தானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது போன்ற சம்பவங்களை ஊக்கப்படுத்த முடியாது எனவும் நீதிபதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

