Jan 12, 2026 - 09:51 AM -
0
சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதானவர் 56 வயதுடைய இந்திய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

