Jan 12, 2026 - 10:31 AM -
0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று (11) சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நேற்று காலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி கடற்கரை பகுதி முழுவதும் ஓர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மற்றும் தேடுதல் நடவெடிக்கை மேற்கொள்ளபட்டது.
இதன் போது மருதங்கேணி கடற்கரை பகுதியில் வாடி ஒன்றில் தங்கி இருந்து கடற்தொழில் செய்யும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரின் உடமையில் இருந்து 4.780g ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதி மன்றத்தில் நேற்று மருதங்கேணி பொலிசால் முற்படுத்தப்பட்டது
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் மேலும் மூன்று நாட்கள் குறித்த சந்தேக பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கினார்.
--

