சினிமா
பராசக்தியின் இரண்டாம் நாள் வசூல் விபரம்

Jan 12, 2026 - 11:06 AM -

0

பராசக்தியின் இரண்டாம் நாள் வசூல் விபரம்

பொங்கல் பண்டிகையில் முக்கிய போட்டி படங்களில் ஜனநாயகனும், மற்றும் பராசக்தியும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டவையாகும். 

அதில் குறித்த இரண்டு படங்களுக்கும், தணிக்கை பிரச்சினை ஏற்பட்ட நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படம் வௌிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. 

எவ்வாறாயினும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கப்பெற்ற பராசக்தி கடந்த 10 ஆம் திகதி வௌியானது. 

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். 

அத்துடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

தணிக்கையில் பராசக்தியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. 

படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி உருவாகியுள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை, தாய் தந்தை இல்லாத செழியன் சின்னதுரை சகோதரர்கள் பாட்டியின் அரவணைப்பில் வளர்கின்றனர். செழியன் இந்தி எதிர்ப்பு பக்கம் செல்லாமல் வேலையில் கவனம் செலுத்துகிறார். 

கல்லூரி மாணவனாக சின்னதுரை வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்கிறார். 

ஒரு கட்டத்தில் சின்னதுரையின் செயல்பாடுகளை செழியனான சிவகார்த்திகேயன் கண்டுபிடிக்கிறார். அவரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார். ஆனால் அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். 

அதற்குபின் என்ன ஆனது? அவரின் கொள்கை நிறைவேறியதா? அதற்கு செழியன் என்ன செய்தார்? உண்மையில் அவர் யார்? ஏன் இந்தி எதிர்ப்பு பக்கம் அவர் செல்லவில்லை? இவர்கள் இருவருக்கும் திருவாக வரும் ரவி மோகனுக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கு தமிழ் மீது ஏன் அதீத கோபம்? இந்தி எதிர்ப்பால் என்னென்ன நடந்தது என்பதே இந்த பராசக்தி. 

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் 'பராசக்தி' படத்தின் முதல் நாளில் வசூலானது இந்தியாவில் 12.5 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அதுவே உலக அளவில் 27 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தின் இரண்டாம் நாளில் இந்தியாவில் 10.15 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. 

குறித்த இரண்டு நாட்களிலும் பராசக்தி படம் 22.65 கோடி ரூபாவை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

கடந்த 2 வருடங்களில் சிவகார்த்திகேயனின் படம் ஒன்று மிக குறைந்த வசூலை முதல் இரண்டு நாட்களில் பெற்றிருப்பது பராசக்தியேயாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வௌிவந்த அமரன் மற்றும் மதராஸி ஆகிய படங்களின் ஆரம்ப நாட்களின் வசூலை கூட இந்தப் படம் பெறவில்லை என கூறப்படுகின்றது. 

2024 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் வௌிவந்த அயலான் படமே இந்தியாவில் முதல் இரண்டு நாட்களில் 9.6 கோடி ரூபாய் என்ற குறைந்த வசூலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05