Jan 12, 2026 - 11:16 AM -
0
யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஐந்து கிராம் மற்றும் 39 மில்லி கிறாம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
--

