Jan 12, 2026 - 12:49 PM -
0
இன்று (12) காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் விஜயிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்க திட்டமிட்டுள்ளதால், விசாரணை பல மணி நேரம் நீடிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள தெரிவிக்கின்றன.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணிக்கு விஜய் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் காலை 6.20 மணியளவில் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.
இந்த விசாரணையின்போது, 7 மணி நேரம் தாமதமாக பரப்புரை நடைபெற்றது ஏன்? பெருங்கூட்டத்திற்கு மத்தியில் விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி? நெரிசல் எப்படி நடந்தது, பரப்புரை இடத்திலிருந்து வெளியேறியது ஏன்? உள்பட பல்வேறு கிடுக்குப்புடி கேள்விகள் விஜய்யிடம் கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணை பல மணிநேரம் நடத்தப்படலாம் என்றும் நாளையும் தொடர வாய்ப்பிருக்கிறது எனவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

