சினிமா
படம் பார்க்கும்போது தியேட்டரிலேயே உயிரைவிட்ட ரசிகர்!

Jan 12, 2026 - 04:46 PM -

0

படம் பார்க்கும்போது தியேட்டரிலேயே உயிரைவிட்ட ரசிகர்!

படம் பார்க்கும்போது தியேட்டரிலேயே ரசிகர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஹைதராபாத்தின் Kukatpally பகுதியில் இருக்கும் அர்ஜுன் தியேட்டரில் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்து இருக்கும் Mana Shankara Vara Prasad Garu படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் அதை பார்க்கும்போது தான் அந்த நபர் உயிரிழந்து இருக்கிறார். 

ஆனந்த் குமார் என்ற அந்த நபர் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

அருகில் இருக்கும் தனியார் வைத்தியசாலையில் தூக்கி சென்ற நிலையில் அவர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05