சினிமா
51 கோடி ரூபா அள்ளி அதிரடி வசூல் வேட்டை

Jan 12, 2026 - 06:42 PM -

0

51 கோடி ரூபா அள்ளி அதிரடி வசூல் வேட்டை

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த 10 ஆம் திகதி வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'பராசக்தி' படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 

முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியானது. 

பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 27 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. 

இந்நிலையில், பராசக்தி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் 51 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05