செய்திகள்
பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

Jan 13, 2026 - 08:02 AM -

0

பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (12) பிற்பகல் மாலபே, தலஹேன பகுதியில் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நவம்பர் 14, 2025 அன்று பொரளை பகுதியில் ஒரு பெண்ணை வாளால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்தின் முக்கிய சந்தேகநபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரிடமிருந்து T56 ரக துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகுறிது. 

ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05