Jan 13, 2026 - 11:09 AM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளார். இந்தத் திருமணம் டெல்லி - என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்புறவு மலர்ந்து, பின்னர் காதலாக மாறியது. 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவர். மேலும், ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
தவான் முன்னதாக 2012 இல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2021 இல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023 இல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இருவரும் தங்கள் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளனர்.

