Jan 13, 2026 - 11:48 AM -
0
கலாச்சாரம், கதை சொல்லல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை ஆராய்ச்சியின் மையமாகக் கொண்டு, புதுமையான பார்வையுடன் TONIK தனது புதிய அடையாளத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பயண மற்றும் சுற்றுலா துறையில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து, சுற்றுலா, தளவாடம், பொழுதுபோக்கு, காப்புறுதி மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஆசியாவின் பல சந்தைகளில் வேரூன்றியுள்ள, பிராந்தியத்தின் மிகப்பெரிய பன்முகத்தன்மை கொண்ட குழுமங்களில் ஒன்றான Acorn குழுமத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள TONIK, இலங்கையின் சுற்றுலாத் துறையின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தும் குழுமத்தின் தொலைநோக்குச் சிந்தனையின் அடையாளமாக விளங்குகிறது.
எல்லைகளைக் கடந்து மனிதர்களையும் பொருட்களையும் அனுபவங்களையும் இணைப்பதில் Acorn குழுமம் பல தசாப்தங்களாகப் பெற்றுள்ள அனுபவத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டது TONIK. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு ஆன்மா உண்டு என்ற குழுமத்தின் நம்பிக்கையை இந்த வர்த்தகநாமம் உள்வாங்கியுள்ளது. அந்த ஆன்மாவை நேர்த்தியாகத் தொகுக்கப்பட்ட விருந்தோம்பல் அனுபவங்களாக மாற்றுவதே TONIK-இன் நோக்கம். சொத்துரிமையாளர்களுக்கு உண்மையான மதிப்பை வழங்குவதும், உலகப் பயணிகளின் மாறிவரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதும், இலங்கையை உலக மேடையில் பிரகாசிக்க வைப்பதும் அதன் இலக்காக விளங்குகிறது.
“இலங்கையின் சுற்றுலாத் துறையின் கதை செழுமையும், பல்வகை தன்மையும் கொண்டது. ஆனால் அது உலகின் தேர்ந்த பயணிகளை ஈர்க்கும் விதத்தில் சொல்லப்பட வேண்டியுள்ளது. ‘Every Stay Is a Story’ (ஒவ்வொரு தங்குமிடமும் ஒரு கதை) என்ற TONIK-இன் தத்துவம், இன்றைய சுற்றுலா துறையின் பரிணாமத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறது. உண்மைத்தன்மை, கலாச்சாரம் மற்றும் அர்த்தமுள்ள அனுபவங்கள் தற்போது விருப்பமல்ல. மாறாக அவசியமானவை. சமூகங்கள், கைவினைத் திறன் மற்றும் வரலாற்றால் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் தனித்துவமான கதைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். TONIK-இன் வடிவமைப்பு சார்ந்த, கலாச்சார வேரூன்றிய அணுகுமுறை நாட்டின் கவர்ச்சியை மேம்படுத்துவதோடு, சமூகங்கள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் முழு சுற்றுலா சூழலுக்கும் நிலையான மதிப்பை உருவாக்கும்.” என்று Acorn குழுமத்தின் பங்குதாரரான ஹரித் பெரேரா தெரிவித்தார்.
“Every Stay Is a Story” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட TONIK, சிறிய உல்லாச விடுதிகளையும், சிற்றோட்டல்களையும் (villas and boutique hotels) வெறும் வணிகச் சொத்துகளாக அல்லாமல் உயிரோட்டமான கதைகளாக பார்க்கிறது. ஒவ்வொரு சொத்தும் கட்டிடக்கலை, நினைவுகள், கலைத்திறன் மற்றும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட தனித்துவமான அடையாளமாக கருதப்படுகிறது. இந்த அணுகுமுறை, இலங்கையில் காணப்படும் ஒரு உண்மையான சந்தை இடைவெளியை நிரப்புகிறது. இலங்கையில் சிறந்த தனித்துவ சிறிய உல்லாச விடுதிகள் இருந்தபோதிலும், பல சொத்துக்கள் உலகின் கவனத்தை ஈர்ப்பதிலும் சரியான இடத்தைப் பிடிப்பதிலும் சிரமப்படுகின்றன. ஒவ்வொரு சொத்தின் தனித்தன்மையையும் அடையாளம் கண்டு, பாதுகாத்து, வலுப்படுத்துவதன் மூலம், அந்த தனித்துவத்தை வருமானம் ஈட்டும் வாய்ப்பாக TONIK மாற்றுகிறது.
இதுதொடர்பில் TONIK இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தரராஜா கோகுலராஜா கருத்து தெரிவிக்கையில், “TONIK மூலம், இலங்கை ஒரு புதிய சுற்றுலா மறுமலர்ச்சியின் வாசலில் நிற்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். கண்டுபிடிக்கப்பட வேண்டிய கதைகள், பாதுகாக்கப்பட வேண்டிய மரபுகள், பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய வேண்டிய அனுபவங்கள் என நாட்டில் இன்னும் வெளிப்படுத்தப்படாத ஏராளமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த திறனை நுணுக்கத்துடனும், படைப்பாற்றலுடனும், புதுமையுடனும் வெளிக்கொணர்வதே எங்கள் இலக்கு. எங்கள் சொத்துகளை உயிரோட்டமான கதைகளாக வளர்த்துக் கொண்டு, அவற்றை தாங்கி நிற்கும் சமூகங்களை மதிப்பதன் மூலம், உண்மைத்தன்மை கொண்ட, எதிர்காலத்துக்கு தயாரான, ஆழமான இலங்கை அடையாளத்துடன் இணைந்த ஒரு புதிய சுற்றுலா அத்தியாயத்தை உருவாக்க விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.
TONIK-உடன் இணையும் சொத்துரிமையாளர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு காத்திருக்கிறது. உலகளாவிய சுற்றுலா சந்தையின் நாடித்துடிப்பை அறிந்த Acorn குழுமத்தின் ஆழமான புரிதலும் செல்வாக்கும் அவர்களுக்குச் சாதகமாக அமைகிறது. மாலைதீவுகள், மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசியா எனப் பரந்து விரியும் வலுவான தொடர்புகளும், வான்வழிப் போக்குவரத்து, பயணம், தளவாடம் போன்ற துணை நிறுவனங்களின் ஆதரவும் குழுமத்திற்கு உறுதுணையாக நிற்கின்றன. பயணிகளின் மனநிலையை, குறிப்பாக பெருஞ்செல்வந்தர்களின் பயணத் தேர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் துல்லியமாக கணிக்கும் திறன் Acorn-க்கு உண்டு மாலைதீவுகளில் இத்துறையில் குழுமம் கொண்டிருக்கும் ஆதிக்கமே இதற்குச் சான்றாகும். இந்த அனுபவத்தின் அடிப்படையில் உருவான TONIK, இலங்கையை வெறும் போட்டியாளராக அல்லாமல், உலகின் சிறந்த சுற்றுலா தலங்களுக்கு நிகரான தரத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய சந்தைகளை வெல்லும் வல்லரசாக மாற்ற முனைகிறது.
இன்றைய உலகப் பயணிகள் அவசரத்தை விரும்புவதில்லை. அவர்கள் தேடுவது ஆழமான, அமைதியான, அர்த்தமுள்ள தருணங்களை. இந்த மாற்றத்தை உள்வாங்கிய TONIK, வடிவமைப்பு, உயர்தர சேவை, மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு விருந்தினருக்கும் தனித்துவமான அனுபவங்களை வழங்குகிறது. உணர்வுகளைத் தீண்டும் இந்த அனுபவங்கள், தரமான பயணங்களை நாடும் செல்வந்தர்களையும் நவீன சிற்றோட்டல் பயணிகளையும் ஒருசேர கவர்கின்றன.
சுற்றுலாவின் நாளை குறித்து TONIK-க்கு ஒரு கனவு உண்டு. ஒவ்வொரு விடுதியும் நாட்டின் கலாச்சாரம், சமூகங்கள், கைவினைத் திறமைகள் மற்றும் அறியப்படாத கதைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வாயிலாக மாற வேண்டும். Acorn குழுமத்தின் பலம், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற கட்டமைப்புகள், மற்றும் புத்தாக்கத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றுடன், உலக அரங்கில் இலங்கையின் விருந்தோம்பல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடுத்த பெரிய வர்த்தகநாமமாக TONIK உருவெடுக்கத் தயாராகிறது.
இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய அத்தியாயத்தை எழுதும் TONIK, உலகெங்கிலும் உள்ள பயணிகளின் எதிர்கால தேவைகளைப் புரிந்துகொண்டு, சர்வதேச நிறுவனங்களுக்கு நிகரான தரத்தை உருவாக்கி வருகிறது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உல்லாச விடுதி வர்த்தகநாமமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் இலட்சியத்தை நோக்கி TONIK வேகமாக முன்னேறி வருகிறது.
TONIK இன் தனித்துவமான தங்குமிடங்கள் மற்றும் சேவைகள் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு +94 77 728 8881 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.tonik.world என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

