Jan 13, 2026 - 11:58 AM -
0
சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, அண்மையில் அதன் ஏழு பிராந்திய மருந்து விநியோக அலகுகளுக்கு ISO 9001:2015 மற்றும் Good Distribution Practice (GDP) சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ்களை பியூரோ வெரிடாஸ் இலங்கை வழங்கியுள்ளது.
மருந்து இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான உயர்தர தரநிலைகளை பேணுவதற்கான Healthguard Distributionஇன் உறுதியான அர்ப்பணிப்பை இந்த கௌரவமான சான்றிதழ்கள் சிறந்த முறையில் நிரூபிக்கின்றன.
ISO 9001:2015 என்பது, சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கிய உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தர நிர்வகிப்பு நிலையாகும், இது ஐக்கிய இராச்சியத்தின் அங்கீகார சேவை (United Kingdom Accreditation Service - UKAS) மூலம் வழங்கப்படுகிறது. அது அனைத்து அளவிலான நிறுவனங்களுக்கும், பயனுள்ள தர நிர்வகிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான ஒரு தரநிலை கட்டமைப்பை வழங்குகிறது.
மேலும், இந்த GDP சான்றிதழானது, மருந்து விநியோகத் தொடரில் சிறந்த தரநிலைகளைப் பேணுவதில் Healthguard Distribution கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் அங்கீகார சேவைகளால் (UKAS) அங்கீகரிக்கப்பட்ட Bureau Veritas Lanka நிறுவனம், Healthguard Distributionஇன் செயல்முறைகள், உட்கட்டமைப்பு மற்றும் நடைமுறைகள் ஆகியவை தொழில்துறை சிறந்த நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு, அவற்றை மிக நெருக்கமாக மதிப்பாய்வு செய்துள்ளது.
Healthguard Distributionஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. சாந்த பண்டார, இந்த சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், எங்கள் அனைத்து பிராந்திய மருந்து விநியோக அலகுகளும் ISO 9001:2015 மற்றும் GDP சான்றிதழ்களைப் பெற்றிருப்பது, மருந்து பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றுக்கு எங்கள் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்த உலகளாவிய சான்றிதழ்கள், விநியோகச் சங்கிலி முழுவதும் நம்பகத்தன்மை மற்றும் தொடர்ச்சியான தன்மையைப் பேணிக்கொண்டு, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ற மருந்து பொருட்களை வழங்குவது குறித்த எங்கள் நோக்கத்தை இன்னும் வலுப்படுத்துகின்றன. என கூறினார்.
Healthguard Distributionஇன், அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிர்வகிக்க ஒருங்கிணைந்த தர நிர்வகிப்பு அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது, அனைத்து செயல்பாடுகளும் வாடிக்கையாளர் தேவைகள் உட்பட தேசிய மற்றும் சர்வதேச ஒழுங்குமுறை தரங்களைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறது. மேலும், மருந்து பொருட்களை சேமிக்கும்போதும் கொண்டு செல்லும்போதும் உலக சுகாதார அமைப்பின் (WHO) சிறந்த விநியோக நடைமுறைகளுக்கு இணங்குவதையும், விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் தரம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்கிறது.
மேலும், இந்த மதிப்பீடானது, அனைத்து மருந்து பொருட்களின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்காக Healthguard Distributionஇன் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. நிறுவனம் தர நிர்வகிப்பில் கவனம் செலுத்துவதால், மருந்துகளை சேமித்தல் மற்றும் விநியோகிக்கும் செயன்முறைகளை அவதானமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்கிறது. இது நோயாளர்களின் சுகவாழ்வை உறுதிசெய்ய ஒத்துழைக்கிறது.
Sunshine Holdingsஇன் துணை நிறுவனமான Healthguard Distributionஇன், இலங்கையில் முதல் Distribution-as-a-Service (DaaS) மருந்து மாதிரியை அறிமுகப்படுத்துவதற்காக அதன் தாய் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனம், நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுப் பொருட்களுக்கான நம்பிக்கைக்குரிய விநியோகஸ்தராக செயற்படுகிறது அத்துடன் ஒழுங்குமுறை அதிகாரிகளாலும் மருந்து உற்பத்தியாளர்களாலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கும் கட்டாயமாக இணங்குகிறது. Healthguard Distributionஇன், மருந்து மற்றும் நுகர்வோர் வர்தக நாம நிறுவனங்களுக்கு முழுமையான சேவையை வழங்குகிறது, மேலும் தொழில்துறையின் முற்றுமுழுதான வெற்றியிலும் பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

