Jan 13, 2026 - 12:07 PM -
0
இலங்கை நீண்டகாலமாக இப்பிராந்தியத்தில் கல்வித் துறையில் முன்னணி உள்ள நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் நடைபெறுகின்ற பரீட்சைகளில் சித்தியடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாட்டின் கல்வி முறைமையும் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபட வேண்டும் என்றாலும், இலங்கையில் அந்த மாற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. இதன் காரணமாக, தற்போதைய இளைஞர்கள் எதிர்கால உலகத்தை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது.
இந்தச் சூழலில் STEM கல்வி மிக முக்கியமானதாகிறது. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கல்வியை எளிதாக அணுகும் வாய்ப்பு இன்று மாணவர்களுக்கு கிடைக்கிறது. பாடசாலை பாடத்திட்டத்தைத் தாண்டி அறிவையும், புரிதலையும் வளர்த்துக்கொள்ள இணையம் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. கல்வி முறைமைகளில் உள்ள தாமதங்களால் உருவாகும் குறைபாடுகளை குறைப்பதற்கும் இது உதவுகிறது. இன்றைய தலைமுறை புதிய விடயங்களை ஆர்வத்துடன் தொடர்ந்து தேடிக் கற்றுக்கொள்ள இணையத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், எதிர்காலத்திற்கு தேவையான அறிவும் திறன்களும் பெறப்படுவதால், அவர்களின் ஆர்வமும் அதிகரிக்கிறது.
உலகளவில் STEM கல்விக்கு இன்றளவும் அதிக கவனம் வழங்கப்படுவதற்கான முக்கிய காரணம், அதனால் கிடைக்கும் பயன்கள் மிக அதிகமானவை என்பதுதான். கணிதம், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், தரவு அறிவியல் போன்ற சிக்கலான துறைகளையும் மாணவர்கள் சிறுவயதிலேயே புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தத் துறைகளுக்குத் தேவையான வளங்களும், உள்ளடக்க உருவாக்குநர்களும் அதிகமாக உள்ள நாடுகள் அதனால் கூடுதல் பலன்களைப் பெறுகின்றன.
ஆனால் இலங்கையின் நிலையைப் பார்க்கும்போது, இது கவலைக்கிடமானதாக உள்ளது. STEM கல்வி எவ்வளவு ஒழுங்கமைக்கப்பட்டதாக இருந்தாலும், அதனை முன்னே கொண்டு செல்லும் போது ஒரு பெரிய சவால் உருவாகிறது. அதாவது, STEM துறைகளுடன் தொடர்புடைய உள்ளூர் உள்ளடக்க உருவாக்குநர்கள் குறைவாக இருப்பது. இதன் காரணமாக, இந்தத் துறைகளில் உள்ளடக்க உருவாக்குநர்களை பயிற்றுவித்து ஊக்குவிப்பது இப்போது மிக அவசியமாகியுள்ளது.
இலங்கை இந்த நிலையை எதிர்கொள்வதற்குக் காரணமாக பல அம்சங்கள் உள்ளன. டிஜிட்டல் கல்வி தொடர்பான தவறான புரிதல்கள், இணையம் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டைச் சுற்றியுள்ள அச்சங்கள் போன்றவை அதில் முக்கியமானவை. ஆனால், STEM என்பது பாதுகாப்பானதும், நம்பகமானதும், எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு வாய்ப்பாகும் என்பதை சரியாக புரியவைத்தால், அது இலங்கை மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய ஆதரவாக அமையும்.
இங்கே முக்கியமாக பேச வேண்டியது உள்ளடக்க உருவாக்குநர்களின் பற்றாக்குறை தான். ஒரு துறையைப் பற்றிய கோட்பாட்டு அறிவு மட்டும் போதாது. அதை நடைமுறையில் பயன்படுத்தும் திறனும் அவசியம். உள்ளடக்க உருவாக்குநர்களின் தேவை அங்கேதான் வெளிப்படுகிறது. நடைமுறை சார்ந்த கற்றல் வாய்ப்புகள் இல்லாமல் முழுமையான அறிவைப் பெற முடியாது. அதனால், சமூகத்திற்குத் தேவையான சேவைகளையும் சரியான முறையில் வழங்க முடியாமல் போகிறது.
எனவே, இந்தச் சவாலுக்கு சிறந்த தீர்வு என்பது, STEM துறைகளுக்கான உள்ளூர் உள்ளடக்க உருவாக்குநர்களை அதிக அளவில் உருவாக்கி, ஊக்குவிப்பதாகும். இதனை கருத்தில் கொண்டு, TikTok நிறுவனம் STEM Feed என்ற சிறப்பு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது STEM தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவித்து, இந்த இடைவெளியை குறைப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. கல்வி மற்றும் அறிவைப் பகிர்வதில் ஆர்வம் கொண்ட பலர் TikTok உடன் இணைந்து செயல்படுவதற்கு STEM Feed ஒரு தளமாக செயல்படுகிறது. இதன் மூலம் அறிவும் பயன்பாடும் இடையிலான இடைவெளி குறைய உதவுகிறது.

