Jan 13, 2026 - 12:10 PM -
0
இலங்கையின் ரியல் எஸ்டேட் ஜாம்பவானாக திகழும் Prime Group, தொழிற்துறையில் 30 வருட புத்தாக்கத்தை கொண்டாடுவதுடன், நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை தொடர்ந்து பேணி, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தனது 7ஆவது கிளையை இல. 270, பிரதான வீதி, களுத்துறை – தெற்கு எனும் முகவரியில் திறந்துள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலும், தொழில்னுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் கொண்டு புதிய களுத்துறை கிளை அமைந்துள்ளது. இக் கிளையானது, பிரதேசத்தின் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்வரும் மாதங்களில் Prime Group முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாகவும் உள்ளது. Prime Group இன் பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சியில் களுத்துறை கிளை திறப்பு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.
Prime Group இன் புதிய களுத்துறை கிளை, பிரதான வீதிக்கு முகப்பாக அமைந்துள்ளதுடன், பிரதான நகர்ப் பகுதிகளை இலகுவாக அணுகக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. வாடிக்கையாளர் சௌகரியத்தை இந்தக் கிளை மேம்படுத்துவதுடன், தரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கான Prime Group இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
Prime Group இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “ரியல் எஸ்டேட் மற்றும் வாழ்க்கைமுறை தீர்வுகளை வழங்குவதில் தொழிற்துறை முன்னோடிகளாக அமைந்துள்ள நிலையில், களுத்துறை கிளையை திறந்துள்ளமையானது, எமது நீண்ட கால வளர்ச்சி மூலோபாயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த படியாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கான அணுகல் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கிளை தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், முக்கிய பிராந்திய அமைவிடத்தில் எமது பிரசன்னத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது. தூரநோக்குடனான விரிவாக்கம், வாடிக்கையாளர்களில் கவனம் செலுத்தும் புத்தாக்கம் போன்றவற்றில் Group காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், சேவைச் சிறப்பில் புதிய நியமங்களை நிறுவுவதாகவும் அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தித் திட்டங்களை, நவீன கிளை வசதிகள் மற்றும் செயற்பாட்டு வினைத்திறன்கள் போன்றவற்றை இணைத்து, சிறந்த பெறுமதியை நாம் ஏற்படுத்துவதுடன், இலங்கையில் உயர் பெறுமதி வாய்ந்த முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நவீன வசிப்பிடப் பகுதிகள் ஆகியவற்றை நிறுவுவதில் நம்பிக்கையை வென்ற பங்காளராகத் திகழும் Prime Group இன் நிலையை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
தொலைநோக்குடன் நாடு முழுவதிலும், சர்வதேச மட்டத்திலும் அர்த்தமுள்ள தீர்வுகளையும், பலதரப்பட்ட சேவைகளையும் பெற்றுக் கொடுப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ள Prime Group, இலங்கையின் நம்பிக்கையை வென்ற முன்னணி சொத்து மற்றும் வாழ்க்கைமுறை புத்தாக்க செயற்படுத்துனர் எனும் தனது நிலையை உறுதி செய்துள்ளதுடன், இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதில் பங்களிப்புச் செலுத்தும் பெருமைக்குரிய கூட்டாண்மை நிறுவனமாகவும் அமைந்துள்ளது.
இலங்கையின் நம்பிக்கையை வென்ற ரியல் எஸ்டேட் குழுக்களில் ஒன்றாக அமைந்துள்ள Prime Group 30 வருட கால பாரம்பரியத்துடன், நாட்டின் நகர விருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு வழங்கிய வண்ணமுள்ளது. கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், குழுமம் 70 க்கும் அதிகமான வதிவிட, வணிக மற்றும் பல்நோக்க பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், நவீன வசிப்பிட மற்றும் பணியிட சூழல்களை இலங்கையில் நிறுவியுள்ளது.
ரியல் எஸ்டேட் என்பதற்கு அப்பால், தேசத்தைக் கட்டியெழுப்பல், நிலைபேறாண்மை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டு இயங்கும் Prime Group, சமூக நலன் பேணல், முக்கியமான உட்கட்டமைப்புகள், சுகாதாரவசதிகள் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வதுடன், வியாபாரத்துக்கு அப்பால் தனது தாக்கத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
Prime Group உடன் தொடர்பு கொள்ள 1322 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது www.primelands.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

