Jan 13, 2026 - 12:22 PM -
0
கம்பஹா, வெலிவேரிய - எம்பரலுவ பிரதேசத்தில் வசிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை பெண் உறுப்பினர் அனுஜா ஸ்ரீயந்தியின் வீட்டிற்கு, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படும் நபரொருவர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
நேற்று (12) இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீடு மற்றும் வர்த்தக நிலையம் ஆகியவற்றின் மீது வீதியிலிருந்த கற்களைக் கொண்டு இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் இத்தாக்குதல் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.
இன்று (13) காலை குறித்த பிரதேச சபை உறுப்பினர் வெளிவேரிய பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாக்குதல் நடத்திய போது மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

