Header Logo

கிழக்கு
அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

Jan 14, 2026 - 10:20 AM -

0

அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினால், காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரதக் கடவையைக் கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. 

கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ்) அமைப்பின் உதவியுடன், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் இக்காட்டு யானை கரையைக் கடந்து நீர் வழியாகக் காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

கடந்த சில தினங்களாக வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து, பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கியும், கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்த யானையே இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title