Header Logo

விளையாட்டு
4 அமெரிக்க வீரர்களுக்கு இந்திய விசா மறுப்பு!

Jan 14, 2026 - 06:37 PM -

0

4 அமெரிக்க வீரர்களுக்கு இந்திய விசா மறுப்பு!

டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. 

இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாடும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் வீரர்களை தேர்வு செய்யவில்லை. 

இதற்கிடையே அந்த அணியில் உள்ள பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் அதில் ஆகிய 4 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விசா நிராகரிக்கப்பட்ட தகவலை அலிகான் காணொளி செய்தியில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எங்களால் டி20 உலக கிண்ணத்தில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

இதனால் அமெரிக்கா உலக கிண்ண அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்காவை தவிர இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title