Jan 16, 2026 - 11:20 AM -
0
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் பயணித்த வேன் ஒன்று, வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றில், நேற்று (15) பிற்பகல் 3 மணியளவில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, இருப்பினும் இரண்டு வேன்களும் கடும் சேதமடைந்துள்ளன.
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேகத்தில் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிச் சென்று, எதிர்த் திசையில் பிரவேசித்த வேனுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

