Jan 16, 2026 - 01:56 PM -
0
தேர்தல் காலத்தில் மட்டும் அரசியல்வாதிகள் மக்களைத் தேடிச் செல்லும் கலாசாரத்தை மாற்றி, மக்கள் நலன் சார்ந்த அரசியல் முறையை உருவாக்குவதற்கு 'சர்வஜன அதிகாரம் கட்சியால் முடிந்துள்ளதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மாத்தளை, தீவில்ல கிராம சேவகர் பிரிவில் 'சர்வஜன சபை'யை நிறுவும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திலித் ஜயவீர, சர்வஜன அதிகாரம் முன்வைக்கும் "தொழில்முனைவு அரசு" எனும் கருப்பொருளை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று, மக்களுக்குத் தேவையான அறிவு, சந்தை வாய்ப்புகள் மற்றும் இயலுமான போதெல்லாம் மூலதனத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 'சர்வஜன அதிகாரத்தின் இறுதி நோக்கம் "மகிழ்ச்சியான தேசத்தை" உருவாக்குவதாகும் எனத் தெரிவித்த அவர், ஒரு தேசத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமானால், மக்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

