Jan 16, 2026 - 03:21 PM -
0
பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர், புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் விளையாட்டு சீருடை அணிந்திருந்ததுடன், கைத்துப்பாக்கியை ஒத்த மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

