Jan 16, 2026 - 04:25 PM -
0
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, கொழும்பில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தலா 3 ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், முதலில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகள் ஜனவரி 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதன்படி, போட்டிகள் நடைபெறும் நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள வீதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, நண்பகல் 12:00 மணி முதல் போட்டிகள் நிறைவடையும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வீதிகள் மூடப்படவோ அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவோ மாட்டாது எனவும், வழமை போன்று போக்குவரத்துக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய வீதிகள்:
பிரதீபா மாவத்தை
சத்தர்ம மாவத்தை
ஜயந்த வீரசேகர மாவத்தை
விகாரை வீதி (கெத்தாராம மாவத்தை)
100 அடி வீதி
போதிராஜ மாவத்தை
வின்சென்ட் பெரேரா மாவத்தை
பிரிட்டோ பாபாபுள்ளே வீதி

