சினிமா
ரஜினி 173 படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Jan 16, 2026 - 04:58 PM -

0

ரஜினி 173 படத்தின் படப்பிடிப்பு எப்போது?

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் படம் ரஜினி 173. இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி முதலில் இயக்கவிருந்த நிலையில், சில காரணங்கள் அவர் படத்திலிருந்து வெளியேறினார். 

இதையடுத்து அடுத்ததாக யார் எந்த படத்தை இயக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொங்கல் பண்டிகை என்பதால் வழக்கம் போல் தனது வீட்டின் முன் தனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துவிட்டு, செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். 

அப்போது புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஏப்ரல் முதல் படப்பிடிப்பு தொடக்கம் என கூறினார். மேலும் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, கமர்ஷியல் என்டர்டைனிங் படமாக இருக்கும் என பதிலளித்தார் ரஜினிகாந்த்.

Comments
0

MOST READ
01
02
03
04
05