செய்திகள்
ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கொன்று ஒத்திவைப்பு

Jan 16, 2026 - 05:58 PM -

0

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கொன்று ஒத்திவைப்பு

முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் நெறிப்படுத்தலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

அதனையடுத்து, மேலதிக சாட்சி விசாரணைக்காக வழக்கை பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ