சினிமா
காதலர் தினத்தன்று தனுஷிற்கு திருமணம்?

Jan 16, 2026 - 06:14 PM -

0

காதலர் தினத்தன்று தனுஷிற்கு திருமணம்?

பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் கடந்த ஆண்டில் குபேரா படத்திலும், இட்லி கடை படத்தை இயக்கியும் நடித்திருந்தார். 

இந்தியில் தேரே இஷ்க் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில், போர்த் தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் கர படத்தில் தனுஷ் நடித்துள்ளா். 

மாறுபட்ட கதைக்களத்தில், ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதுபோல், தனுஷ் அடுத்தடுத்து படங்களை கைவசத்தில் வைத்துள்ளார். 

தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். மிருணாள் தாகூரும், தனுஷூம் இணைந்து இதுவரை எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கிடையே கிசு கிசுக்கள் மட்டும் உலா வருகிறது. 

'சன் ஆஃப் சர்தார் 2' பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டதும், அங்கு இருவரும் நெருக்கமாகப் பேசிப் பழகிய வீடியோக்களுமே இந்த வதந்திகள் பரவ முக்கியக் காரணமாக அமைந்தன. 

இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள மிருணாள், "தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவர் அந்த விழாவிற்கு அஜய் தேவ்கனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். மற்றபடி எங்களைப் பற்றி வரும் செய்திகளில் உண்மை இல்லை" என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இந்நிலையில், தனுஷ் - மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டேட்டிங்கிள் இருக்கும் இருவரும் வரும் பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கழித்து விவாரகத்து செய்துக் கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்தநிலையில், தனுஷ் மிருணா தாகூரை 2 ஆவதாக திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05