Jan 16, 2026 - 06:20 PM -
0
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி (Ground frost) ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

