செய்திகள்
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில்

Jan 16, 2026 - 10:42 PM -

0

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில்

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி வீதிப் பகுதியில் இன்று (16) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

'125 வத்தை' எனும் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்தில் சிறுவன் ஒருவனும், சிறுமி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05