பல்சுவை
சட்டவிரோதமாக செயல்பட்ட 242 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம்!

Jan 17, 2026 - 03:30 PM -

0

சட்டவிரோதமாக செயல்பட்ட 242 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம்!

இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா - 2025 இற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார். 

இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேலும் தீவிரப்படுத்தியது. 

இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி உத்தரவிட்டது. ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இந்திய மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய மத்திய அரசு தெரிவிக்கையில், 

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மசோதா அமலானபின், 7,800 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05