Jan 17, 2026 - 03:39 PM -
0
தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் என்பதால், காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக நாகதீப விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நேற்றைய தினம் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டு, நாகதீப விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே விகாராதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தையிட்டி விகாரைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அந்த விகாரையைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை, அதன் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
காணி விடுவிப்பு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும். எனவே, உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள் என ஜனாதிபதியிடம் நான் கூறினேன்," என்று தெரிவித்தார்.
--

