Jan 17, 2026 - 03:54 PM -
0
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிதாரி குழுவொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அந்தச் சந்தர்ப்பத்திலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சம்பவம் கப்பம் கோரும் விவகாரம் தொடர்பில் இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
பொலிஸ் அறிக்கைகளின்படி, கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்குள் மட்டும் நாளாந்தம் சுமார் 63 பேர் குற்றச் செயல்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

