சினிமா
பிக்பாஸ் புகழ் ஜுலிக்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது!

Jan 17, 2026 - 05:56 PM -

0

பிக்பாஸ் புகழ் ஜுலிக்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது!

ஒருகாலத்தில் வெள்ளித்திரைக்கு செல்ல முக்கிய மேடையாக அமைந்து வந்தது சின்னத்திரை. 

ஆனால் இப்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு தான் மக்களிடம் மவுசு அதிகமாக உள்ளது, இது வேறு கதை. 

கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழக மக்கள் ஒன்றாக கூடி ஐல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்த அதன்மூலம் பிரபலமாகி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தவர் தான் ஜுலி. 

அந்த நிகழ்ச்சியின் மூலம் மோசமான பெயரை பெற்றவர் பின் தொகுப்பாளினியாக கலக்கி வந்தார். அப்படியே படங்கள் கமிட்டாகி நடித்தார், ஆனால் சரியான வரவேற்பு பெறவில்லை. 

கடந்த வருட இறுதியில் பிக்பாஸ் புகழ் ஜுலி தனக்கு மொஹமத் இக்ரீம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக புகைப்படத்துடன் அறிவித்தார். முதலில் திருமணம் செய்பவரின் புகைப்படம் வெளியிடவில்லை, பின் வெளியிட்டார். 

பிறகு திருமணத்திற்காக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்தார். 

இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஜுலிக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. மக்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05