சினிமா
அஜித்தின் கார் ரேஸை பார்க்க சென்ற நயன்தாரா

Jan 17, 2026 - 06:12 PM -

0

அஜித்தின் கார் ரேஸை பார்க்க சென்ற நயன்தாரா

நடிகர் அஜித் சமீப காலமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 

பல நாடுகளில் நடக்கும் போட்டிகளில் அவரது கார் ரேஸ் டீம் கலந்துகொண்டு வருகிறது. மேலும் அஜித் உடையில் ஸ்பான்சர் ஆக ஒரு பிரபல கோலா கூல் டிரிங்க்ஸ் நிறுவனம் பெயர் இடம்பெற்று இருக்கிறது. அஜித் அதன் விளம்பரங்களுக்கும் போஸ் கொடுத்து இருந்தார். முன்னணி நடிகர் இப்படி கோலாவை விளம்பரப்படுத்துவது பற்றி பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். 

இது ஒருபக்கம் இருக்க துபாயில் நடக்கும் கார் ரேஸில் அஜித்தை நேரில் பார்க்க பிரபலங்களும் அதிகம் வருகின்றனர். 

நேற்று (16) நடிகர் சிபிராஜ் அஜித்தை கார் ரேஸ் ட்ராக்கில் சந்தித்து இருந்த வீடியோ வைரல் ஆனது. தற்போது நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் அஜித்தின் கார் ரேஸை பார்க்க சென்று இறுகின்றனர். 

அஜித் அவர்களை வரவேற்று பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05