உலகம்
ஈரானில் தொடரும் போராட்டங்கள்: 3,000-க்கும் அதிகமானோர் பலி

Jan 17, 2026 - 07:20 PM -

0

ஈரானில் தொடரும் போராட்டங்கள்: 3,000-க்கும் அதிகமானோர் பலி

ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

உயிரிழந்தவர்களில் 2,885 பேர் போராட்டக்காரர்கள் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

 

கடந்த எட்டு நாட்களாக ஈரானில் நிலவிய இணைய முடக்கம் தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களின் தீவிரம் தற்போது குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05