Jan 19, 2026 - 07:48 AM -
0
யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு பொற்பதி - மணல்காடு இணைப்பு வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையேயான சுமார் 500 மீற்றர் விதி பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமையால் பொற்பதி மற்றும் மணல் காடு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொற்பதி மற்றும் மணல்காடு கிராம மக்கள் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
500 மீற்றர் வீதி சீரின்மை காரணமாக சுமார் 8 km தூரம் சுற்றி சென்று தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
அத்துடன் பாடசாலை மாணவர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உரியவர்கள் இது குறித்து கவனமெடுத்து வீதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
--

