வணிகம்
APICTA 2025 பிராந்திய அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாட்டு டிஜிட்டல் புத்தாக்கங்களை NDB வங்கி காட்சிப்படுத்தியது

Jan 19, 2026 - 10:04 AM -

0

APICTA 2025 பிராந்திய அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாட்டு டிஜிட்டல் புத்தாக்கங்களை NDB வங்கி காட்சிப்படுத்தியது

நெஷனல் டெவெலொப்மெண்ட் வங்கியானது (NDB), தாய்வானின் காஒஷியோங் நகரில் நடைபெற்ற மதிப்புமிக்க ஆசிய பசிபிக் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (APICTA) விருதுகள் 2025 நிகழ்வில், இலங்கையை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தியது. வங்கியின் விருது பெற்ற டிஜிட்டல் தீர்வுகளான TradeLinc 2.0 மற்றும் Secure360 2.0 ஆகியவை இந்நிகழ்விற்கு பரிந்துரைக்கப்பட்டன. இந்தப் பிராந்திய அங்கீகாரமானது, அண்மையில் நடைபெற்ற தேசிய சிறந்த தர மென்பொருள் விருதுகள் (NBQSA) 2025 நிகழ்வில் இரு தளங்களும் உயரிய விருதுகளை வென்று பெற்ற வெற்றியைத் தொடர்ந்து கிடைத்ததாகும்; இதன் மூலம் NDBயானது தொழில்நுட்பம் சார்ந்த வங்கி புத்தாக்கங்களில் தனது முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

APICTA 2025, நிகழ்வானது ஆசிய–பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னேற்றமான தொழில்நுட்ப தீர்வுகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்தது. 12 பொருளாதாரங்களைச் சேர்ந்த 205 அணிகள் மற்றும் 256 பரிந்துரைகள் இதில் போட்டியிட்டன. இவ்வளவு கடும் போட்டி நிறைந்த சூழலிலும், NDB-யின் பங்கேற்பு இலங்கையின் டிஜிட்டல் திறன்களின் வளர்ந்த முதிர்ச்சியையும், பிராந்திய மற்றும் உலகளாவிய போட்டியாளர்களுடன் தோளோடு தோள் நின்று போட்டியிடக்கூடிய தீர்வுகளை உருவாக்கும் வங்கியின் திறனையும் தெளிவாக எடுத்துக்காட்டியது. 

NDB-யின் பங்கேற்பின் மையமாக இருந்தது, வங்கியின் முன்னணி டிஜிட்டல் விநியோக சங்கிலி நிதியியல் தளமான TradeLinc 2.0 ஆகும்; இது நிறுவனங்கள் செயல் மூலதனத்தை எவ்வாறு அணுகுகின்றன என்பதை தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது. செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் விரிவாக்கத்திறன் ஆகியவற்றில் வலுவான கவனத்துடன் உருவாக்கப்பட்ட TradeLinc 2.0, கைமுறை மற்றும் ஆவணங்களால் நிறைந்த செயல்முறைகளை முழுமையாக டிஜிட்டல், தொடக்கம் முதல் முடிவு வரை உள்ள ஒரு சூழலமைப்பாக மாற்றுவதன் மூலம் வர்த்தக நிதியியலில் நீண்டகாலமாக இருந்து வரும் சவால்களை தீர்க்கிறது. வேகமான இணைப்பு செயல்முறை, நேரடி தகவல் வெளிப்பாடு மற்றும் கொள்வனவாளர்கள், வழங்குநர்கள், நிதிவழங்குநர்கள் ஆகியோருக்கிடையிலான தடையற்ற ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் பெரிய நிறுவனங்கள் இரண்டையும் வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்க சக்திகளில் ஒன்றை ஆதரிக்கும் முக்கிய பங்கினை இந்தத் தளம் வகிக்கிறது. 

இதற்கு துணையாக, NDB இன் மேம்பட்ட, செயற்கை நுண்ணறிவினால் [AI] இயக்கப்படும் பாதுகாப்பு தளமான Secure360 2.0 இருந்தது. வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்பை முன்கூட்டியே பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Secure360 2.0, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலை பயன்படுத்தி, இணைய அச்சுறுத்தல்கள் உருவாகும் முன்பே அவற்றை அடையாளம் கண்டு, பகுப்பாய்வு செய்து, தணிக்கிறது. அதிகரித்து வரும் இணைய அபாயங்களின் காலகட்டத்தில், தரவு பாதுகாப்பு, செயல்பாட்டு நேர்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றை முன்னுரிமையாகக் கொண்டு, உறுதியான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான வங்கித் துறையை உருவாக்கும் NDB-யின் உறுதிப்பாட்டை இந்தத் தளம் பிரதிபலிக்கிறது. 

APICTA 2025 விருதுகளுக்காக இந்த இரு தீர்வுகளும் பரிந்துரைக்கப்பட்டிருப்பது, NDB- யின் டிஜிட்டல் புத்தாக்கங்கள் உள்ளூர் சந்தைக்கு மட்டும் பொருத்தமானவையாக அல்லாமல், சர்வதேச தரநிலைகளிலும் போட்டியிடக்கூடியவை என்பதற்கான வலுவான உறுதிப்பாடாகும். இது, பிராந்தியம் முழுவதும் உள்ள நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில், விரிவாக்கத்திறன் கொண்ட, புத்திசாலித்தனமான தீர்வுகளை உருவாக்கும் வங்கியின் மூலோபாய கவனத்தை வெளிப்படுத்துகிறது. 

APICTA 2025 நிகழ்வில் NDB-யை பிரதிநிதித்துவப்படுத்தியது, இந்த புத்தாக்கங்களுக்குப் பின்னால் உள்ள கூட்டு முயற்சியை பிரதிபலிக்கும் பல்துறை அணியாகும். இதில் சம்பத் கடுபிட்டியகே – சிரேஷ்ட முகாமையாளர், தகவல் தொழில்நுட்பப பாதுகாப்பு மற்றும் வலையமைப்பு; ருக்மல் தர்மதாச –பிரதம முகாமையாளர், விநியோக சங்கிலி நிதியியல் ; ரோஷன் கலிங்க – பிரதி முகாமையாளர், மென்பொருள் அபிவிருத்தி; பசிந்து பண்டார – கனிஷ்ட அதிகாரி, தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு; இசுரு ராஜகுரு – முகாமையாளர், பாதுகாப்பு அபிவிருத்தி நிலையம்; மற்றும் எம்.கே. ஷியாமல் இந்திக்க – இணை முகாமையாளர் , மென்பொருள் அபிவிருத்தி ஆகியோர் அடங்கினர். அவர்களின் பங்கேற்பு, வங்கிக்குள் வளர்க்கப்பட்டுள்ள ஆழமான உள்நாட்டு நிபுணத்துவத்தையும் புத்தாக்க கலாசாரத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 

NBQSA விருதுகள் மூலம் தேசிய அங்கீகாரத்திலிருந்து, APICTA நிகழ்வின் வழியாக பிராந்திய பிரதிநிதித்துவம் வரை NDB மேற்கொண்ட பயணம், வளர்ச்சி, உறுதித்தன்மை மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றை முன்னேற்றும் மூலோபாய சக்தியாக தொழில்நுட்பத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முதலீட்டின் சிறந்த எடுத்துக்காட்டாகும். மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணங்கும் உள்நாட்டு தீர்வுகளை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு NDB தொடர்ந்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கி வருகிறது. 

NDB முன்னேறிக்கொண்டிருக்கையில், மேலும் சாதுரியமான, பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் நிதி தீர்வுகளை வழங்குவதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தனது உறுதிப்பாட்டில் நிலைத்திருக்கிறது. இதன் மூலம், இலங்கை புத்தாக்கங்கள் உலக மேடையில் வெற்றிகரமாக தமக்கான இடத்தைப் பெற முடியும் என்பதை வங்கி உறுதியாக நிரூபிக்கிறது. 

இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05