Jan 19, 2026 - 10:23 AM -
0
அண்மையில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய சியெட் களனி (CEAT Kelani) விற்பனையாளர்கள் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திற்கு நிறுவனத்தின் பொறுப்பில் அனைத்து செலவுகளும் ஏற்கப்பட்ட சுற்றுப்பயணவாய்ப்பினை வழங்கி பாராட்டப்பட்டனர். இலங்கையின் முன்னணி டயர் வர்த்தகநாமமான சியெட் தனது 2025 சியெட்டுடன் பயணம் செய்யுங்கள் “Travel with CEAT” விருதுத் திட்டத்தின் கீழ், சிறப்பான விற்பனை சாதனைகளை வர்த்தக அங்கீகாரம் மற்றும் உலகத் தரத்திலான பொழுதுபோக்கு அனுபவம் ஆகியவற்றின் இணைப்புடன் கொண்டாடியது.
இந்த சுற்றுப்பயணங்கள்,சியெட் விற்பனையாளர்கள் எட்டு மாத விற்பனைப் பிரசாரத்தின் போது ட்ரக், லைட் ட்ரக், மற்றும் ரேடியல் டயர் பிரிவுகளில் நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று கட்ட ஊக்குவிப்புத்திட்டத்தின் பகுதியாகும். முந்தைய ஆறு மாத சராசரி செயல்திறனைக் காட்டிலும் மேம்பட்ட விற்பனை அளவுகளை எட்டிய பங்கேற்பாளர்கள், இந்த தெரிவு செய்யப்பட்ட மூன்று விருது நிலைகளில் ஒன்றில் தமக்கான இடத்தைப் பெற்றனர்.
ஐந்து நாள் சிங்கப்பூர் பயணம், ஆசியாவின் மிகச் செழுமையான க்ரூஸ் கப்பல்களில் ஒன்றான Genting Dream கப்பலில் நான்கு நாள் கடல் சுற்றுலாவையும், ஒரு நாள் பல்கலாசார நகரமான சிங்கப்பூரை ஆராய்வதையும் கொண்டது. 18 தளங்கள், 35-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பார்கள், Zodiac Theatre இல் நேரடி நிகழ்ச்சிகள், நீச்சல் குளங்கள், பீச் கிளப் பார்ட்டிகள் போன்ற குடும்ப பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட இந்த கப்பலில், விற்பனையாளர்கள் உயர்தரமான கடல் விடுமுறை அனுபவத்தை பெற்றனர். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, தாய்லாந்தின் புகெட் தீவு விஜயம் இடம்பெற்றது. அங்கு பங்கேற்பாளர்கள் கப்பலில் இறங்கி, தீவின் அழகிய கடற்கரைகள், சந்தைகள் மற்றும் உள்ளூர் சமையல் வகைகளை அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றனர்.
மறுபுறம், தாய்லாந்து பகுதிக்கான பயணத் திட்டம், குழுவினருக்கு பட்டாயா மற்றும் பாங்கொக் நகரங்களில் நான்கு நாள் தங்கும் அனுபவத்தை வழங்கியது. இதில், Chao Phraya Princess கப்பலில் Chao Phraya ஆற்றில் இடம்பெற்ற க்ரூஸ் இரவு விருந்து மிகவும் சிறப்பாக இருந்தமை குறிப்பிடத்கக்கது. பாங்கொக்கின் ஒளிரும் நகரக் காட்சி, Grand Palace, Wat Arun போன்ற புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு, விருந்தினர்கள் தாய் மற்றும் சர்வதேச உணவுகளுடன் நேரடி இசை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் அனுபவித்தனர். பயணத் திட்டத்தில் கொரல் ஐலண்ட் (Koh Larn) எனப்படும் பளிங்கு வெண்மை மணல்களும், பச்சை நீலக் கடலும் கொண்ட அழகிய தீவுக்கான ஒரு நாள் சுற்றுலாவும் இடம்பெற்றது. நீந்துதல், நீர் விளையாட்டு, ஓய்வு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த தீவு சிறந்ததாக விளங்கியது.பங்கேற்பாளர்கள் ஆடம்பர வசதிகளும் அன்பான விருந்தோம்பலும் கொண்ட Berkeley Hotel Pratunam இல் தங்கியிருந்து, பாங்கொக்கின் உயிர்ப்பான வர்த்தகப்பகுதிகளில் ஷொப்பிங்கையும் முழுமையாக அனுபவித்தனர்.
சியெட்டுடன் பயணம் செய்யுங்கள் முயற்சி வெறும் பரிசளிப்பு திட்டம் அல்ல, அதற்கு மேற்பட்ட ஒன்றாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சியெட் களனியின் வெற்றியை முன்னோக்கி நகர்த்துவதிலும், வாடிக்கையாளர் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் விற்பனையாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கை இந்த முயற்சி உறுதிப்படுத்துகிறது. நாடு முழுவதும் சியெட்டினை பிரதிநிதித்துவப்படுத்துவது எமது விற்பனையாளர்களே, என்று சியெட் களனி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ஷமல் குணவர்தன கூறினார். அவர்கள் காட்டிய அபாரமான செயல்திறன், அர்ப்பணிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையால் சியெட் இன்று இலங்கையின் முன்னணி டயர் வர்த்தக நாமமாக திகழ்கிறது. இந்த சுற்றுப்பயணங்கள், இந்த சாதனைகளைப் பெற்றவர்களைப் போலவே அபூர்வமான அனுபவங்களை வழங்கி, அவர்களுக்கு தெரிவிக்கும் நன்றி பாராட்டாகும்.
பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும் தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைவதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் துணைபுரிகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பயணிகள் கார்கள், வேன்கள், SUV கள்,வர்த்தக வாகனங்கள் (பயாஸ்-பிளை மற்றும் ரேடியல்), மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான நியூமேடிக் டயர்கள் அடங்கும்.
சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு முன்பு, அடுத்த 18 மாதங்களுக்கு மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

