வணிகம்
2026 ICC ஆண்களுக்கான T20 உலகக்கிண்ணத்தின் உத்தியோகபூர்வ வானொலி ஒலிபரப்பாளராகFM Derana அறிவிப்பு

Jan 19, 2026 - 10:36 AM -

0

2026 ICC ஆண்களுக்கான T20 உலகக்கிண்ணத்தின் உத்தியோகபூர்வ வானொலி ஒலிபரப்பாளராகFM Derana அறிவிப்பு

கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மாத்திரமன்றி, ஒவ்வொரு பந்துவீச்சும் இதயத்துடிப்பாக உணரப்படும் ஒரு நாட்டில், 2026 ICC ஆண்களுக்கான T20 உலகக் கிண்ணத்தின் இலங்கையின் உத்தியோகபூர்வ வானொலி ஒலிபரப்பாளராக (Official Radio Broadcaster) FM Derana அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 14 புதன்கிழமை அன்று Sri Lanka Tourism Board-இன் Sea Festival Hall-இல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் இலங்கையினால் இணைந்ததாக நடத்தப்படும் இந்த உலகளாவிய கிரிக்கெட் திருவிழா, 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. 

FM Derana-வைப் பொறுத்தவரை, இந்த அறிவிப்பானது இலங்கையின் கிரிக்கெட் ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு பயணத்தின் தொடர்ச்சியாகும். 2011 ICC உலகக் கிண்ணத் தொடருக்கான ஒலிபரப்பு உரிமையைப் பெற்றதன் மூலம், ICC உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ வானொலி ஒலிபரப்பாளராக மாறிய இலங்கையின் முதலாவது உள்ளூர் தனியார் வானொலி என்ற பெருமையை FM Derana பெற்றது. இதன் மூலம், நேரடி கிரிக்கெட் வானொலி ஒலிபரப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த அரசாங்கத்தின் ஏகபோக உரிமையை உடைத்து, நாடு முழுவதிலும் உள்ள நேயர்களுக்கு இன்னும் விரிவான மற்றும் ரசிகர்களை மையப்படுத்திய அனுபவத்தை வழங்க வழிவகுத்தது. 

இலங்கையர்களைப் பொறுத்தவரை, கிரிக்கெட் என்பது பேருந்துகள், தேநீர்க் கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளின் வராந்தாக்களில் வானொலிச் சத்தத்தை உயர்த்தி வைத்து உணர்வுப்பூர்வமாக ரசிக்கப்படும் ஒன்றாகும். இந்த ஆழமான பிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கையெங்கும் உள்ள ரசிகர்கள் தொடரின் ஒவ்வொரு கணத்தையும் நேரடி அனுபவத்துடனும், தனித்துவமான உற்சாகத்துடனும் உணர்வதை உறுதி செய்யும் வகையில் FM Derana-வின் ஒலிபரப்பு அமையவுள்ளது. 

2026 ICC ஆண்களுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதற்கான முழுமையான நேரடி ஒலிபரப்பை FM Derana தனது 92.2 மற்றும் 92.4 FM அலைவரிசைகளின் ஊடாக நாடு முழுவதுமாகவும் வழங்கவுள்ளது. 

நாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய மற்றும் அனுபவம் வாய்ந்த வர்ணனையாளர்களைக் கொண்டு இந்த ஒலிபரப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நேரடி வர்ணனைக்கு மேலதிகமாக, அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணத்துவப் பயிற்சியாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய வானொலி மற்றும் டிஜிட்டல் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊடக சந்திப்பில் Derana Media Network மற்றும் Sri Lanka Cricket ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் ஆளுமைகள் கலந்துகொண்டனர். இதில் Madhava Madawala (Executive Director/ Chief Operation Officer), Bandula Dissanayake (Secretary – Sri Lanka Cricket), மூத்த வர்ணனையாளர் Bandula Saman Waturegama, Bandara Wijeratne (General Manager – Programs, FM Derana) மற்றும் Roshan Fernando (General Manager – Marketing, FM Derana) ஆகியோர் பங்கேற்றனர். 

இலங்கை தேசம் மீண்டும் ஒருமுறை சிங்கக் கொடியின் கீழ் அணிதிரளத் தயாராகி வரும் நிலையில், FM Derana-வின் இந்த உத்தியோகபூர்வ வானொலி ஒலிபரப்பானது ஒவ்வொரு உற்சாகத்தையும், ஒவ்வொரு உணர்ச்சியையும் இலங்கை முழுவதிலும் உள்ள இல்லங்களுக்கும் இதயங்களுக்கும் கொண்டு செல்லும். ஏனெனில் இத்தீவில், கிரிக்கெட் என்பது வெறும் ரசிக்கப்படும் ஒன்றல்ல; அது சுவாசிக்கப்படும் ஒன்றாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05