வணிகம்
புத்தம்புதிய பாலில் இருந்து ஆடம்பர ஓய்வுப் பயணங்கள்: “Scan & Win Big” வெற்றியாளர்கள் 10 பேருக்கு அம்பேவல வெகுமதிகளை வழங்கியுள்ளது

Jan 19, 2026 - 10:48 AM -

0

புத்தம்புதிய பாலில் இருந்து ஆடம்பர ஓய்வுப் பயணங்கள்: “Scan & Win Big” வெற்றியாளர்கள் 10 பேருக்கு அம்பேவல வெகுமதிகளை வழங்கியுள்ளது

உச்சம் என்பது வெறுமனே தனது தயாரிப்புக்களின் வாக்குறுதி மாத்திரமன்றி, அது ஒரு அனுபவம் என்பதை அம்பேவல மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இலங்கையின் மிகவும் உச்சமான மற்றும் 1 வது ஸ்தானத்தில் திகழ்ந்து வரும் புத்தம்புதிய பால் நாமமான அம்பேவல, மிகவும் பிரபலமாக முன்னெடுத்திருந்த “Scan & Win Big” நுகர்வோர் ஊக்குவிப்பின் மூலமாக, அன்றாட ஊட்டச்சத்தை முற்றிலும் புதிய மட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், பிரத்தியேகமான உச்ச விடுமுறைத் திட்டங்களை விசுவாசம்மிக்க அம்பேவல நுகர்வோர் 10 பேருக்கு வெகுமதியளித்துள்ளது. 

அம்பேவல மீது தினசரி குடும்பங்கள் காண்பித்து வருகின்ற நம்பிக்கையைப் போற்றிக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த ஊக்குவிப்பில், வெல்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு 1 லீட்டர் அம்பேவல புத்தம்புதிய பால் அல்லது 1 லீட்டர் அம்பேவல ஆடை நீக்கிய பால் பாக்கெட்டை கொள்வனவு செய்யுமாறு நுகர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 10 வாரங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் மூலமாக வாரந்தோறும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டதுடன், தயாரிப்புக்களை வாங்கி பயன்பெறுவதற்கு அப்பால், வர்த்தகநாமத்துடன் தமது ஈடுபாடுகளை ஆர்வத்துடன் பேணுவதற்கு நாடெங்கிலும் அதிக எண்ணிக்கையான நுகர்வோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

இதில் பங்குபற்றும் வழிமுறை மிகவும் இலகுவானதாக திட்டமிடப்பட்டதுடன், டிஜிட்டலுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. 1 லீட்டர் பாக்கெட்டில் பொறிக்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்து, கொள்வனவை உறுதிப்படுத்தும் சான்றுடன் தமது விபரங்களை சமர்ப்பிப்பது மாத்திரமே இதற்குத் தேவைப்பட்டதுடன், அதன் பின்னர் வாராந்த சீட்டிழுப்பில் பங்குபற்றுவதற்கு அம்பேவல முகநூல் பக்கத்தை அவர்கள் follow செய்ய வேண்டியிருந்தது. மேலதிக பாக்கெட் ஒன்றை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவர்கள் வெற்றி பெறுவதற்கு மற்றொரு வாய்ப்பாக மாறியதுடன், இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரம் இடம்பெற்ற காலப்பகுதியில் நுகர்வோரின் ஈடுபாட்டை வலுவாக முன்னெடுப்பதற்கு உதவியுள்ளது. அத்துடன், நம்பிக்கைக்கு வெகுமதியளிப்பதை அர்த்தமுள்ளதாகவும், வாழ்வில் மறக்க முடியாததாகவும் மாற்றுவதில் அம்பேவல நாமத்தின் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. விசேட உச்ச விடுமுறை அனுபவங்களை வென்றுள்ள நெலும் விக்கிரமதுங்க, அத்துல அபேசுந்தர, றிபானி ஜுமாத், துரேஷா கொத்தலாவல, தீபா சரோஜனி, விஷாகா விஜேதுங்க, அமில சத்துரங்கி, லக்லி வத்துகல, ஷாலினி புலுகஹபிட்டிய, மற்றும் தானியா பெர்னாண்டோ ஆகிய 10 வெற்றியாளர்களுக்கும் அம்பேவல பெருமையுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் full-board அடிப்படையில் Heritance Kandalama, Heritance Tea Factory, அல்லது Heritance Ahungalla ஆகிய புகழ்பெற்ற Heritance உல்லாச விடுதிகளில் ஒன்றில் இரு நாள் தங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வர். 

“உச்சம்” என்ற தனது வாக்குறுதியை உண்மையாக கடைப்பிடித்தவாறு, முற்றிலும் ஆடம்பரமான வழியில் ஓய்வெடுக்க உதவும் வகையில் இவ்விடுமுறைத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட உதவிப் பணியாளர்களுடன் கூடிய சொகுசு தங்குமிட வசதிகள், விசேட ஏற்பாட்டுடனான மெழுகுவர்த்தி ஒளி இரவு விருந்துகள், தனிப்பட்ட உணவு விருந்து அனுபவங்கள், இலவச வைன் போத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு வரப்பிரசாதங்கள் வெற்றியாளர்கள் அனுபவிக்க முடியும் என்பதுடன், உண்மையில் மிகக் கவனமாக திட்டமிடப்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை மேம்படுத்தும் உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கு கிடைக்கும் வியப்பான அனுபவத்தை மேலும் ஒரு படி சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு இடத்திலும் தனித்துவமான அனுபவங்களை வழங்கும் விசேட ஏற்பாடுகள் கொண்ட விடுமுறைச் சுற்றுலாக்களை இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரம் உள்ளடக்கியுள்ளதுடன், வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகின்றது. 

Heritance Kandalama ஹோட்டலில் தங்கவுள்ள வெற்றியாளர்கள் மின்னேரிய வனவிலங்கு காப்பகத்தில் சவாரி ஏற்பாட்டைப் பெற்றுக்கொள்வதுடன், வியப்பூட்டும் நிலப்பிரதேசங்களில் சுதந்திரமாக சுற்றித்திரியும் யானைகளை அவர்கள் நேரடியாக கண்டுகளிக்க முடியும். Heritance Tea Factory ஹோட்டலில் தங்கவுள்ள வெற்றியாளர்கள் அம்பேவல அதிநவீன பாற்பண்ணைக்கு வழிகாட்டியுடன் சுற்றுலாவை மேற்கொண்டு, பிரத்தியேகமான சீஸ் சுவைபார்ப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன், வரலாற்றுச் சிறப்பு மிக்க தேயிலைத் தொழிற்சாலைக்கும் செல்லவுள்ளனர். Heritance Ahungalla ஹோட்டலில் தங்கவுள்ள வெற்றியாளர்கள் மாது கங்கையின் சதுப்பு நிலங்களிலுள்ள கண்டல் காடுகள் வழியாக அழகிய பின்னணிகளுடன் படகுச் சவாரியை அனுபவிக்கவுள்ளதுடன், சொகுசு அம்சங்கள் நிறைந்த விடுமுறையுடன், உள்ளூரின் தனித்துவமான, மறக்க முடியாத அம்சங்களை அனுபவிப்பர். 

இம்முயற்சியினூடாக இலங்கையில் நுகர்வோர் ஊக்குவிப்புப் பிரச்சாரம் எவ்வாறு முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதில் பாரிய திருப்புமுனையை அம்பேவல தொடர்ந்தும் ஏற்படுத்தி வருவதுடன், வழக்கமாக வழங்கப்படுகின்ற பரிசுகளுக்கும் அப்பாற்சென்று, இந்த வர்த்தகநாமத்தின் பண்புகளான தரம், அக்கறை, மற்றும் மகத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் உயர் மட்ட அனுபவங்களை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கீல்ஸ், கார்கில்ஸ் ஃபூட் சிற்றி, குளோமார்க், ஆர்பிக்கோ, ஸ்பார், மற்றும் லாஃப்ஸ் உள்ளிட்ட முன்னணி நவீன சுப்பர்மார்க்கெட்டுக்கள் மூலமாக பிரத்தியேகமாக கிடைக்கப்பெறும் இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரம், புத்தம்புதிய பால் தயாரிப்பில் அம்பேவல நிறுவனம் முன்னிலை வகிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தமது குடும்பங்களின் நுகர்வுக்காக இந்த வர்த்தகநாமத்தை தினந்தோறும் தெரிவு செய்யும் நுகர்வோருடனான தனது பிணைப்பையும் வலுப்படுத்துகின்றது. 

இது குறித்த பேரார்வரம் ஏற்கனவே வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை நிஜமாக்கியுள்ளதுடன், ஐந்து வெற்றியாளர்கள் தமது சொகுசு விடுமுறைகளை சிறப்பாக களித்துள்ளனர். எஞ்சியுள்ள ஐந்து வெற்றியாளர்களுக்கான சுற்றுலாக்கள் குறித்த ஏற்பாடுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வாரங்களில் அவர்களுடைய கொண்டாட்டங்கள் தொடர்வது உறுதி செய்யப்படும். 

“Scan & Win Big” ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் வெற்றியை அம்பேவல சிறப்பாகக் கொண்டாடும் இத்தருணத்தில், இது வெறும் ஆரம்பம் மாத்திரமே என்பதை இந்த வர்த்தகநாமம் மீண்டும் எடுத்துக்கூற விரும்புகின்றது. மேலும் பல வியப்புக்கள், வெகுமதிகள், மற்றும் உயர் மட்ட அனுபவங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கொள்வனவும் அவர்களுக்கு இன்னும் பாரியளவில், இன்னும் சிறப்பானதாக, மற்றும் உண்மையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வாய்ப்புக்களை அம்பேவல தொடர்ந்தும் தோற்றுவிக்கும். வரவிருக்கும் அறிவிப்புக்கள் மற்றும் எதிர்கால வெற்றி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அம்பேவல சமூக ஊடகத் தளங்களுடன் இணைந்திருக்குமாறு நுகர்வோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05