வணிகம்
2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் 'Moose Fan' செயலியை அறிமுகப்படுத்திய Moose நிறுவனம்

Jan 19, 2026 - 10:55 AM -

0

 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் 'Moose Fan' செயலியை அறிமுகப்படுத்திய Moose நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளரான Moose Clothing Company, 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, ரசிகர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய அணியுடன் நெருக்கமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிஜிட்டல் அனுபவமான Moose Fan App செயலியையும் அறிமுகப்படுத்தி ஒரு முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. 

இந்த அறிமுகமானது இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்திற்கும் Moose நிறுவனத்திற்கும் இடையில் 2023ஆம் ஆண்டில் ஆரம்பமான பங்காளித்துவத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு வசதியான, நீண்ட காலம் நீடிக்கக் கூடிய, மைதானத்தில் சிறப்பான செயற்பாட்டை மேற்கொள்ளக் கூடிய தன்மை கொண்ட அம்சங்களில் கவனம் செலுத்தி, செயல்திறன் மிக்க ஆடைகளை வடிவமைத்து Moose நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டியை இணைந்து நடத்த இலங்கை தயாராகி வரும் நிலையில், இந்த ஒத்துழைப்பானது செயல்திறன் மிக்க வடிவமைப்பு, தேசத்தின் பெருமை மற்றும் உலகளாவிய ரீதியில் ரசிகர்களின் பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. 

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண சீருடையானது, நவீன செயல்திறன் மற்றும் இலங்கையின் உலகத்தரம் வாய்ந்த ஆடைத் தொழில்துறை பாரம்பரியம் ஆகியவற்றுடன் இணைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த T-shirt இன் வடிவமைப்பானது, ஒற்றை பருத்தி துணியிலான ஜேர்சி (cotton single jersey) இன் தயாரிப்பில் உபயோகிக்கும் பின்னல் முறையினால் ஈர்க்கப்பட்ட , ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட வளையங்களின் வடிவமைப்பாக டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பானது துல்லியம், வலிமை, நெகிழ்வுத்தன்மை, புத்தாக்கம் ஆகியவற்றை காண்பிக்கிறது; இவை இலங்கை கிரிக்கெட்டின் உணர்வையும் நாட்டின் உலகளாவிய ரீதியில் மதிக்கப்படும் ஆடைத் தொழில்துறையையும் பிரதிபலிக்கும் குணங்களாகும். 

இலங்கையின் அடையாளமான பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் செறிவான நீல நிறக் கலவைகளைக் கொண்டுள்ள இந்தச் சீருடையானது ஆற்றல், ஒற்றுமை, நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பெயர் மற்றும் இலக்க முறைகளில் நவீன, சமகாலத்திற்கு ஏற்ற, சர்வதேச தன்மையை இது கொண்டுள்ளதோடு, தோள்களில் உள்ள தனித்துவமான நீல நிற கட்டமைப்பு (piping) தேசிய அடையாளத்திற்கு மதிப்பளிக்கிறது. சிறந்த செயல்திறனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தச் சீருடை, காற்றோட்டத்தை மேம்படுத்த பக்கவாட்டு வலை அமைப்புகளுடன் (mesh panels) கூடிய இலகுவான மற்றும் காற்றோட்டமான துணியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது; பல்வேறு விளையாட்டுச் சூழல்களிலும் வசதியாகவும், நீடித்து நிலைக்கக் கூடியதாகவும், உச்சகட்ட செயல்திறனை உறுதி செய்வதாகவும் இது அமைகிறது. 

சீருடை அறிமுகத்துடன் இணைந்ததாக, Moose நிறுவனம் 'Moose Fan App' எனும் புரட்சிகரமான ரசிகர்களின் ஈடுபாட்டுடன் கூடிய தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, அணியின் சீருடையுடன் இணைந்து அதன் அங்கமாக மாறுவதற்கு ரசிகர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்தச் செயலியின் மூலம், ஆதரவாளர்கள் ஒரு செல்பி புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றலாம், அது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு டிஜிட்டல் புகைப்பட கலவையால் (digital mosaic) இணைக்கப்பட்டு, ஒரு விசேட Moose Fan Jersey ஆக உருவாக்கப்படும். 

அதன் பின்னர் ரசிகர்கள் அந்த புகைப்பட கலவைக்குள் தங்களது சொந்தப் புகைப்படத்தை தேடிக் கண்டறிய முடியும், இது தேசிய ரீதியான ஆதரவை, புலப்படுகின்ற மற்றும் தனிப்பட்ட அடையாளமாக மாற்றுகின்ற விடயமாக மாற்றுகின்றது. இந்த அனுபவமானது, பௌதீக மற்றும் டிஜிட்டல் ஆகிய இரு உலகங்களையும் தடையற்ற முறையில் இணைக்கிறது. Moose Fan Jersey இல் அச்சிடப்பட்ட QR குறியீடு ஒன்று காணப்படும். அதனை ஸ்கேன் செய்யும் போது, அது ரசிகர்களை நேரடியாக இந்த டிஜிட்டல் புகைப்பட கலவைக்கு அழைத்துச் செல்லும். இதன் மூலம் ரசிகர்கள் தாம் அணியும் சீருடையுடன் அதற்குள் தாம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காண முடியும். 

இந்த புகைப்பட மொஸைக் கலவை அம்சத்திற்கு அப்பால், Moose Fan App செயலியானது உலகக் கிண்ணத்திற்கு முன்னரும், போட்டியின் போதும், அதற்குப் பின்னரும் ஆதரவாளர்களை தொடர்பில் வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான, ரசிகர்கள் ஈடுபட்டு செயற்படும் சூழலை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தளமானது, பிரத்தியேக உள்ளடக்கங்கள், ஊடாடல் அம்சங்கள் மற்றும் ரசிகர்களை முன்னுரிமைப்படுத்தும் அனுபவங்களின் மையமாக செயல்படும்; இது வெறுமனே ஒரு வணிக அம்சமாக மாத்திரமல்லாமல், ஒரு கூட்டுப் பயணம் எனும் கருத்தை வலுப்படுத்துகிறது. அந்த வகையில் இதில் பங்கேற்கும் ஒவ்வொரு இரசிகரும் இந்தக் கதையின் ஒரு அங்கமாக மாறுகிறார்கள். இது Moose Fan Jersey ஆடையை ஒரு முக்கியமான சேகரிக்கக் கூடிய நினைவுச் சின்னமாக மாற்றுகிறது. 

இந்த அறிமுகம் குறித்து Moose Clothing Company பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசீப் ஓமர் கருத்து வெளியிடுகையில், "இலங்கை கிரிக்கெட் என்பது எப்போதும் விளையாட்டை தாண்டி ஒரு தேசமாக நாம் யார் என்பது பற்றியதாக விளங்குகின்றது. இந்த புதிய உலகக் கிண்ணச் சீருடை மற்றும் Moose Fan App மூலம் ஒவ்வொரு இலங்கையரும் அந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக மாறுவதை உணர நாம் விரும்பினோம். இம்முறை, கிரிக்கெட் அணியின் சீருடையானது, வெறுமனே எமது அணியை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தாமல்; அதற்குப் பின்னால் நிற்கும் மக்களின் முகங்களையும் கதைகளையும் அது தாங்கி நிற்கிறது. எமது வீரர்கள் மைதானத்தில் இறங்கும்போது, அவர்கள் ஒரு முழு தேசத்தின் பெருமையை சுமந்தவர்களாக, குறிப்பாகச் சொல்வதானால், தங்களின் முதுகில் சுமந்து செல்கிறார்கள்." என்றார். 

இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா இது குறித்து தெரிவிக்கையில், "புதிய சீருடையை உருவாக்கியமை தொடர்பில் Moose நிறுவனத்திற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எதி்ரவரும் உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை வர்த்தகநாமத்தை உலகிற்கு கொண்டு செல்ல இது உதவும் என்று நான் நம்புகிறேன். அதே வேளையில் எமது அணியுடனும், வீரர்கள் மற்றும் விளையாட்டுடனும் எமது ரசிகர்கள் மிகவும் நெருக்கமாக இணைவதற்கு இது வழிவகுக்கும்." என்றார். 

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடையின் பிரதிகள் (Replicas) கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள Moose Clothing விற்பனை நிலையங்களிலும், www.mooseclothingcompany.com எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக ஒன்லைனிலும் கிடைக்கின்றன. இணையவழி கொள்வனவுகளுக்கு இலவச விநியோகமும் வழங்கப்படுகிறது. Moose Fan Jersey இனை Moose Fan App செயலி மூலம் மட்டுமே பிரத்தியேகமாக முன்பதிவு செய்ய முடியும். 

Moose Fan App செயலியை, 2026 ஜனவரி 21 முதல் Google Play மற்றும் iOS தளங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும். இலங்கை 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தை நோக்கி கவனத்தை செலுத்தும் நிலையில் இடம்பெற்றுள்ள இந்த அறிமுகமானது, ரசிகர்கள் தேசிய அணிக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு புதிய வழியைக் காண்பிப்பதோடு, இங்கு ரசிகர்கள் இந்த சீருடையை அணிவதோடு மாத்திரமல்லாமல், அதன் ஒரு அங்கமாகவும் மாறுகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05