வணிகம்
இலங்கை மக்களுக்கு சிக்கனமான வழியில் மருத்துவ சேவைகளை வழங்கும் அதேசமயம், உலகளாவிய தராதரத்தைப் பேணுவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் JCI “Gold Seal of Approval” அங்கீகாரத்தை Melsta Hospitals சம்பாதித்துள்ளது

Jan 19, 2026 - 10:58 AM -

0

இலங்கை மக்களுக்கு சிக்கனமான வழியில் மருத்துவ சேவைகளை வழங்கும் அதேசமயம், உலகளாவிய தராதரத்தைப் பேணுவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் JCI “Gold Seal of Approval” அங்கீகாரத்தை Melsta Hospitals சம்பாதித்துள்ளது

Joint Commission International (JCI) Accreditation அண்மையில் வெளியிட்டுள்ள 8 வது பதிப்பு தராதரங்களின் கீழ், இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட நாட்டின் முதலாவது வைத்தியசாலையாக மாறியுள்ள Melsta Hospitals, இலங்கையின் தனியார் மருத்துவத் துறையில் திருப்புமுனைமிக்க சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது. நோயாளரின் பாதுகாப்பு, சிகிச்சையின் தரம், மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரஒப்பீட்டு நியமங்களுக்கு கண்டிப்பாக இணங்குவதை இந்த அங்கீகாரம் பிரதிபலிப்பதுடன், இலங்கை மக்களுக்கு சிக்கனமான வழியில் மருத்துவ சேவைகளை வழங்கும் அதேசமயம், சர்வதேச தராதரம் கொண்ட பராமரிப்பில் Melsta Hospitals காண்பிக்கும் அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசரீதியாக நன்மதிப்புப் பெற்று விளங்கும் தரச்சான்றளிக்கும் அமைப்பான JCI, நோயாளர் பராமரிப்பு குறித்த வழிமுறைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிறுவன ரீதியான ஆட்சி நிர்வாகம், மற்றும் தர முகாமைத்துவ முறைமைகள் ஆகியவற்றின் மத்தியில் உலகத்தரம் வாய்ந்த பெறுபேற்றுத்திறன் குறித்த விரிவான கருத்துக்கணிப்பு நடைமுறையினூடாக வைத்தியசாலைகள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்கின்றது. ஆபத்துக்களைக் குறைத்து, மேம்பட்ட பலனை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிறப்பாக கட்டமைக்கப்பட்ட, சான்று அடிப்படையிலான நடைமுறைகள் மூலமாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் என்ற தன்னம்பிக்கையை இந்த தரச்சான்று அங்கீகாரமானது நோயாளர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் அளிக்கின்றது. 

இத்தகைய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்ற சமயங்களில் மாத்திரமல்லாது, தினந்தோறும் இடைவிடாது சிறப்பாகச் செயற்படும் முறைமைகளைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ள தரம் தொடர்பான பல ஆண்டு கால பயணத்தின் விளைவே Melsta Hospitals ஈட்டியுள்ள இச்சாதனை. Melstacorp PLC ன் உரிமையாண்மையின் கீழ், தரம் தொடர்பான அடிப்படைக் கட்டமைப்புக்கள் முதல், செயல்பாட்டு மகத்துவத்தின் உச்ச மட்டங்கள் வரை இவ்வைத்தியசாலை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதுடன், அனைத்து அணிகள் மற்றும் சேவைப் பிரிவுகள் மத்தியில் மருத்துவ நிர்வாகம், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சோதனைக் கட்டங்கள், மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட கலாச்சாரத்தின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தியுள்ளது. 

Melsta Hospitals தலைவரும், Melstacorp PLC குழுமத்தின் பிரதித் தலைவருமான திரு. Royle Jansz அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்த சாதனை மைல்கல்லினை எட்டுவதில் Melsta Hospitals மற்றும் அதன் அணியை வழிநடாத்தியுள்ளமை குறித்து நான் பெருமை கொள்வதுடன், எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ள ஒரு கௌரவமாகவே கருதுகின்றேன். இது வைத்தியசாலை மற்றும் குழுமம் ஆகிய இரண்டிற்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை. 2020 ம் ஆண்டில் நாம் இதனைப் பொறுப்பேற்றது முதல், இந்நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி கண்டுள்ளதுடன், நோயாளர்களுக்கு சேவைகளை வழங்கி, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஆதரவளித்து, மருத்துவ சேவை நிறுவனம் ஒன்றிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற பொறுப்புணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி வந்துள்ளது.” 

Melsta Hospitals ன் நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் கே. தியாகராஜா இறைவன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ISO தரச்சான்று அங்கீகாரம் மற்றும் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட தர மேம்பாடு மீதான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியனவே இக்கனவின் ஆரம்பப் புள்ளிகள். நாட்டில் ISO 9001:2015 தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது வைத்தியசாலையாக நாம் மாறியதுடன், ஒருங்கிணைக்கப்பட்ட முகாமைத்துவக் கட்டமைப்பு தரச்சான்று அங்கீகாரம் மற்றும் தரத்திற்கான தேசிய மட்ட அங்கீகாரம் ஆகியவற்றுடன் அப்பயணம் சிறப்பாக தொடர்ந்தது. புத்தம்புதிய 8 வது பதிப்பின் தராதரங்களின் கீழ் JCI தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை எமது ஒட்டுமொத்த அணிக்கும் பெருமை சேர்ப்பிக்கும் ஒரு தருணமாக அமைந்துள்ளது. கம்பஹா, கொழும்பு மாநகரம், மற்றும் இலங்கை எங்கிலும் சிக்கனமான கட்டணங்களுடன் மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேசரீதியாக ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்ற எமது இலக்கில் நாம் மிகத் தெளிவாக உள்ளோம்.” 

எதிர்காலத்தைப் பொறுத்தவரை, பரிணமித்து வருகின்ற நோயாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விசேட மருத்துவ சேவைகள், மருத்துவ சேவைகள், மற்றும் சேவை ஆற்றலை விரிவுபடுத்தும் அதேசமயம், தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு Melsta Hospitals திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு மதிப்பைத் தோற்றுவித்து, இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு பங்களிக்கும் வகையில் சர்வதேச ரீதியாக நோயாளர்களை ஈர்ப்பதற்காக மருத்துவ சுற்றுலாத்துறை சேவைகளை ஆரம்பிக்கும் முயற்சிகளில் இவ்வைத்தியசாலை ஈடுபட்டுள்ளதுடன், உள்ளூர் சமூகங்களுக்கு சிக்கனமான கட்டணங்களில், விரிவான மருத்துவ சேவைகளை வழங்கும் அதன் தற்போதைய அர்ப்பணிப்பையும் சிறப்பாக முன்னெடுக்கவுள்ளது. 

Melsta Hospitals தொடர்பான விபரங்கள் 

இலங்கையில் பல்வேறுபட்ட விசேட மருத்துவ சேவைகளை வழங்கும் முன்னணி தனியார் வைத்தியசாலையாகத் திகழ்ந்து வருகின்ற Melsta Hospitals, இலங்கையின் பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமங்களில் ஒன்றான Melstacorp PLC க்குச் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். நோயாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் பல்வேறு விசேட மருத்துவ சேவைகள் மத்தியில் வளர்ச்சி கண்டு வரும் அதன் ஆற்றல் ஆகியவற்றின் மூலமாக நோயாளர்களின் பாதுகாப்பு, மருத்துவ சேவைகளின் மகத்துவம், மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றின் மீது அர்ப்பணிப்புக் கொண்டுள்ள இவ்வைத்தியசாலை, சர்வதேச நோயாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ள அதேசமயம், இலங்கை மக்களுக்கு சிக்கனமான கட்டணங்களில் சர்வதேசரீதியாக ஒருங்கிணைந்த தரம் கொண்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் தொடர்ந்தும் சிறப்பாக இயங்கி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05