விளையாட்டு
பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த விராட் கோலி!

Jan 19, 2026 - 12:02 PM -

0

பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த விராட் கோலி!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ஓட்டங்களை குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர். 

அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி சதமடித்து அசத்தினார். 

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 3 ஆவது துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய அதிக ஓட்டங்கள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடங்களில் பாண்டிங் - 12,662 ஓட்டங்கள் (330 இன்னிங்ஸ்), சங்ககாரா 9,747 ஓட்டங்கள் (238 இன்னிங்ஸ்), காலிஸ் 7,774 ஓட்டங்கள் (200 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05