Jan 19, 2026 - 01:12 PM -
0
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்து வீச்சை செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ஓட்டங்களை குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2 - 1என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் டேரெல் மிட்சல் 9 ஓட்டங்களில் முதலிடத்தை தவற விட்டுள்ளார். இந்த தொடரில் அவர் 352 ஓட்டங்கள் குவித்து 3 ஆம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில பாபர் - 360 ஓட்டங்கள் (WI) மற்றும் கில் 360 ஓட்டங்கள் (NZ) ஆகியோர் உள்ளனர்.

