Jan 19, 2026 - 01:34 PM -
0
நாட்டிலுள்ள அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள் மத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் தரப்படுத்தப்பட்டுள்ள இலங்கை தகவல் தொழில்நுட்பக் கற்கைமையம் (Sri Lanka Institute of Information Technology - SLIIT), 2026 ம் ஆண்டு பிரதான தொகுதிக்காக மாணவர்களை உள்வாங்கிக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்க ஆரம்பித்துள்ளதுடன், பரிணமித்து வருகின்ற தொழில்துறையின் கேள்விகளை நிறைவேற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பல்வகைப்பட்ட பட்டப்படிப்பு கற்கைநெறிகளை ஆராய்ந்து, தகைமைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அதிநவீன கல்வி வழிமுறைகள், உலகத்தரம் வாய்ந்த வசதிகள், அத்துடன், படைப்பாற்றல் மற்றும் கூட்டுக் கல்வி ஆகியவற்றை அத்திவாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள பல்கலைக்கழக கலாச்சாரம் ஆகியவற்றுடன், இலங்கையில் கல்வித் துறையில் மகத்துவத்திற்கான தர ஒப்பீட்டு நியமத்தை SLIIT தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.
தொடர்ந்து பரிணமித்து வருகின்ற உலகின் கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்குத் தயாராக, உலகளாவிய ரீதியில் போட்டித்திறன் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதில் SLIIT காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பு வலுவான சான்றாக இவ்வாண்டு மாணவர்கள் உள்வாங்கும் நிகழ்வு மாறியுள்ளது. 2026 ம் கற்கையாண்டுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றம், வாய்ப்பு, மற்றும் எல்லையற்ற சாத்தியங்களுக்கான பயணம் ஆரம்பிக்கின்றது என்றால் மிகையாகாது.
கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் 1999 ம் ஆண்டில் நிறுவப்பட்ட SLIIT, 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் மகத்துவத்திற்கு மிக வலுவான பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. மாலபே, கொழும்பு, கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு பல்கலைக்கழகங்களையும், மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரு மையங்களையும் கொண்டுள்ள SLIIT நாடெங்கிலும் பரந்த அளவில் கல்விக்கான வாய்ப்பினை வழங்கி வருகின்றது.
சர்வதேச மற்றும் பிராந்திய தரப்படுத்தல்களில் மிகவும் போற்றத்தக்க ஸ்தானங்களில் இடம்பிடித்துள்ளமை, கல்வி மகத்துவத்தின் மீது SLIIT காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்த சான்றாகும். Times Higher Education World University Rankings 2026 என்ற தரப்படுத்தலின் பிரகாரம், நாடாளவியரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மத்தியில் மூன்றாவது ஸ்தானத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், இலங்கையில் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள் மத்தியில் இலங்கையில் முதலிடத்தில் திகழும் முதன்மையான கல்வி என்ற பெருமையையும் சுமக்கின்றது. Association of Commonwealth Universities (ACU) மற்றும் International Association of Universities (IAU) உள்ளிட்ட பிரசித்தி பெற்ற அமைப்புக்களில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளமை SLIIT ன் உலகளாவிய அங்கீகாரத்தை எடுத்துக்காட்டுகின்றது.
தொழில்நுட்பவியல் கல்வியில் முன்னணி வகிக்கின்ற கணினி கற்கைபீடமானது (Faculty of Computing), செயற்கை நுண்ணறிவே கல்வி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் எதிர்காலம் என்பதை அங்கீகரித்து, ஏற்கனவே வழங்கி வருகின்ற பல்வகைப்பட்ட விசேட பட்டப்படிப்புக்களுக்கு மேலதிகமாக செயற்கை நுண்ணறிவில் விசேட தகைமையைப் பெற்றுக்கொள்வதற்கு BSc (Hons) in Information Technology என்ற 4 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியியல் (Software Engineering), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), இணைய பாதுகாப்பு (Cyber Security), கணினி கட்டமைப்புக்கள் மற்றும் வலையமைப்பு பொறியியல் (Computer Systems & Network Engineering), தரவு அறிவியல் (Data Science), தகவல் கட்டமைப்பு பொறியியல் (Information Systems Engineering) மற்றும் இருவழித்தொடர்பு ஊடகம் (Interactive Media) ஆகிய துறைகளில் விசேட தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான BSc (Hons) in Information Technology பட்டப்படிப்புக்களையும் மாணவர்கள் மேற்கொள்ள முடியும். மேலும், BSc (Hons) in Computer Science அல்லது BSc (Hons) in Computer Systems Engineering ஆகிய கற்கைநெறிகளையும் அவர்கள் மேற்கொள்ள முடியும். இப்பட்டப்படிப்புக்கள் அனைத்தும் Institution of Engineering and Technology (IET) ன் அங்கீகாரம் கொண்டவை என்பதுடன், தொழிற்துறையின் கேள்வி மற்றும் பரிணமித்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் ஒன்றும் வண்ணம் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளன.
AACSB ன் அங்கத்துவத்தைக் கொண்டுள்ள SLIIT Business School, நடைமுறைக்கு அமைவான திறன்கள் மற்றும் தொழில்துறையுடன் அவற்றின் பொருத்தம் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற பாடநெறியுடன், வலுவான வர்த்தக உலகில் வெற்றி காண்பதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, புத்தாக்கமான, தொழிலை இலக்காகக் கொண்ட கற்கைநெறிகளை வழங்குகின்றது. வணிக பகுப்பாய்வு (Business Analytics), வணிக முகாமைத்துவம் (Business Management), மனித மூலதன முகாமைத்துவம் (Human Capital Management), சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் (Marketing Management), கணக்கியல் மற்றும் நிதி (Accounting & Finance), ஏற்பாட்டியல் மற்றும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவம் (Logistics & Supply Chain Management), முகாமைத்துவ தகவல் கட்டமைப்புக்கள் (Management Information Systems), மற்றும் தர முகாமைத்துவம் (Quality Management) ஆகிய துறைகளில் விசேட தகைமைகளுடன் BBA (Hons) பட்டங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, பரிணமித்து வருகின்ற நவநாகரிக தொழில்துறையில் வளம் காண்பதற்கான திறன்களை மாணவர்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ள உதவுவதற்காக, Manchester Fashion Institute of Manchester Metropolitan University ன் ஒத்துழைப்புடன், BSc (Hons) Fashion Business and Management பட்டப்படிப்பையும் SLIIT Business School வழங்குகின்றது. Business Analytics கற்கைநெறியானது Institute of Analytics (IoA) ன் அங்கீகாரத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொறியியல் பீடத்தைப் பொறுத்தவரையில் (Faculty of Engineering), மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் (Electrical & Electronic Engineering), குடிசார் பொறியியல் (Civil Engineering), மூலப்பொருட்கள் பொறியியல் (Materials Engineering), எந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering) மற்றும் எந்திரவியல் பொறியியல் (எந்திர மின்னணுவியலில் விசேட தகைமை) (Mechanical Engineering (Mechatronics Specialisation)) ஆகிய துறைகளில் BSc Engineering (Hons) பட்டப்படிப்புக்களை வழங்கி வருகின்றது. BSc Engineering (Hons) in Mechanical Engineering மற்றும் BSc Engineering (Hons) in Civil Engineering ஆகியன நிபந்தனை அடிப்படையில் Institute of Engineers in Sri Lanka (IESL) ன் அங்கீகாரத்தைக் கொண்டுள்ளன. கோட்பாட்டு நிபுணத்துவம் மற்றும் நேரடி செயல்முறை அனுபவம் ஆகியவற்றின் இணைப்புடன் விரிவான கற்கைநெறிகளை இப்பீடம் வழங்குகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores University ன் ஒத்துழைப்புடன் BSc (Hons) Quantity Surveying கற்கைநெறியையும் SLIIT வழங்குகின்றது.
மனிதநேயம் மற்றும் அறிவியல் பீடமானது (Faculty of Humanities and Sciences) தற்போது BSc (Hons) Psychology, LLB (Hons) மற்றும் BA (Hons) English ஆகிய துறைகளில் புதிய, 4 ஆண்டு கால உள்ளூர் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்குகின்றது. இப்பீடம் வழங்கும் பல்வகைப்பட்ட பட்டப்படிப்புக்களில் Bed (Hons) degrees in Physical Sciences, Biological Sciences, English, Social Sciences அத்துடன் Biotechnology & Financial Mathematics மற்றும் Applied Statistics ஆகிய துறைகளில் BSc (Hons) பட்டப்படிப்புக்களும் அடங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் Deakin University ல் Bachelor of Nursing பட்டப்படிப்புக்கு வாய்ப்பளிக்கும் Higher Diploma in Nursing கற்கைநெறியையும் இது வழங்குகின்றது. இலங்கை மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவிடமிருந்து (Tertiary and Vocational Education Commission) தேசிய தொழிற்கல்வித் தகுதி மட்டம் 6 (NVQ L6) ன் அங்கீகாரத்தை இக்கற்கைநெறி பெற்றுள்ளது.
SLIIT School of Architecture கற்கைபீடம், Sri Lanka Institute of Architects (SLIA) இடமிருந்து BSC (Hons) Architecture கற்கைநெறிக்கான பகுதி 1 பூரண அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதற்குப் புறம்பாக BA (Hons) Interior Design கற்கைநெறியையும் இப்பீடம் வழங்குவதுடன், இவ்விரு பட்டப்படிப்புக்களும் ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores University ன் ஒத்துழைப்புடன் வழங்கப்படுகின்றன. வடிவமைப்பு நிபுணத்துவம், தொழில்நுட்ப தேர்ச்சி, மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த நடைமுறைகள் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதில் இக்கற்கைநெறி கவனம் செலுத்துகின்றது. INSPIRELI சர்வதேச கட்டடக்கலை பல்கலைக்கழக தரப்படுத்தலின் பிரகாரம் ஆசியாவில் கட்டடக்கலை கற்கைநிலையங்கள் மத்தியில் முதல் 2 ஸ்தானங்களுக்குள் இடம்பிடித்துள்ளதுடன், இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மத்தியில் 1 வது ஸ்தானத்திலும் தரப்படுத்தப்பட்டு, அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.
SLIIT வழங்கும் சர்வதேச கற்கைநெறிகளும் கணிசமான அளவில் வியாபித்துள்ளதுடன், அவுஸ்திரேலியா Deakin University உடன் இணைந்து இலங்கையில் முதல்முறையாக Bachelor of Artificial Intelligence (AI) அவுஸ்திரேலிய பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தி சாதனையை நிலைநாட்டியுள்ளது. இப்பட்டப்படிப்பை இலங்கையிலேயே முழுமையாக நிறைவு செய்வதற்கு முதல் முறையாக இத்தகைய வாய்ப்புக் கிட்டியுள்ளது. பலதரப்பட்ட பீடங்கள், பொழுதுபோக்கு வசதிகள், மற்றும் அவுஸ்திரேலியாவின் University of Queensland, Deakin University, Curtin University, The University of Western Australia ஆகிய பல்கலைக்கழகங்கள், ஐக்கிய இராச்சியத்தின் John Moores University மற்றும் University of Edinburgh ஆகிய பல்கலைக்கழகங்கள், அத்துடன் சர்வதேச நாடுகளுக்குச் சென்று கற்கும் வாய்ப்புக்களுடன் உலகில் முதல் 100 ஸ்தானங்களில் இடம்பிடித்துள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்ற முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களுடனான இணைப்புக்கள் போன்ற வரப்பிரசாதங்களுடன் மிகச் சிறந்த கல்வி மற்றும் பல்கலைக்கழக வாழ்வின் பயனை மாணவர்கள் அனுவிக்க முடியும்.
ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores University உடன் இணைந்து, BSc (Hons) Psychology, LLB (Hons) Law, BSc (Hons) Architecture, BA (Hons) Interior Design, BSc (Hons) Quantity Surveying, மற்றும் Bachelor of Business Administration ஆகிய துறைகளில் 3 ஆண்டு கால பட்டப்படிப்புக்களை SLIIT வழங்குகின்றது. ஐக்கிய இராச்சியத்தின் Manchester Fashion Institute of Manchester Metropolitan University ன் ஒத்துழைப்புடன் BSc (Hons) Fashion Business and Management பட்டத்தையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
கலாநிதிப் பட்டம் பெற்ற சுமார் 100 விரிவுரையாளர்கள் மற்றும் போதனாசிரியர்களை SLIIT கொண்டுள்ளதுடன், Stanford–Elsevier தரப்படுத்தல்களின் பிரகாரம் அவர்களில் ஆறு பேர் சர்வதேச அளவில் முதல் 2% உச்ச ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் தரப்படுத்தப்பட்டுள்ளனர். தனது ஆராய்ச்சி வெளிப்பாடு மற்றும் புத்தாக்க ஆற்றல் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தும் முகமாக, Artificial Intelligence (CEAI) மற்றும் Informatics, Electronics & Transmission (CEIET) ஆகியவற்றில் மத்திய நிபுணத்துவ அணிகளையும் இப்பல்கலைக்கழகம் நியமித்துள்ளது.
மகத்துவம் மீது SLIIT காண்பிக்கும் அர்ப்பணிப்பானது கல்விக்கு அப்பால் வியாபித்து, அதன் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளையும் எட்டியுள்ளது. மாலபே பல்கலைக்கழகத்திலுள்ள அதன் Library Learning Commons ஆனது ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு மீது கவனம் செலுத்தியுள்ள, தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்திய கற்கும் சூழலை வழங்குகின்றது. சகல உபகரண வசதிகளையும் கொண்ட உடற்பயிற்சிக்கூடம் மற்றும் 20 க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் அடங்கலாக, விரிவான விளையாட்டு வசதிகளையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகின்றது. தொழில்நுட்பம், கலைகள், விளையாட்டுக்கள், மற்றும் தொழில்வாண்மை முயற்சிகள் மீது கவனம் செலுத்தியுள்ள ஏராளமான கழகங்கள் மற்றும் சங்கங்கள் ஊடாக பல்வேறுபட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஈடுபட முடியும். உளவளத்துணை மற்றும் நல்வாழ்வு, குறுந்தூர நடமாட்டத்திற்கான போக்குவரத்து சேவைகள், மருத்துவ வசதி, தொழில் வழிகாட்டல் மற்றும் பல வசதிகள் உள்ளிட்ட உதவிச் சேவைகளையும் SLIIT வழங்குகின்றது.
தற்போது கல்வி பயிலுகின்ற 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 96% வேலைவாய்ப்பு வீதத்தை அனுபவிக்கின்ற 40,000 க்கும் மேற்பட்ட பழைய மாணவர்களைக் கொண்ட சிறப்பான சமூகத்துடன், தொழிற்துறைக்கு சிறப்பாக முகங்கொடுக்கும் வல்லமை படைத்த பட்டதாரிகளைத் தோற்றுவிக்கும் தன் திறனை SLIIT மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளது. மாணவர்களுக்கான உதவிச் சேவைகள் கருமபீடம், மாணவர் ஒன்றியம், ஆங்கில உதவி கருமபீடம், தொழில்முறை உளவள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் உள்ளிட்ட விரிவான உதவிச் சேவைகளை இக்கல்வி நிறுவனம் வழங்குகின்றது.
க.பொ.த உ/த (இலங்கை) மற்றும் லண்டன் உ/த பரீட்சைகளில் அனைத்து துறைகளிலும் உச்சப் பெறுபேறுகளை ஈட்டும் மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களையும் SLIIT வழங்கி வருகின்றது. பெறுபேற்றுத்திறன் அடிப்படையிலான மற்றும் விளையாட்டுக்களில் திறமைகளுக்கான புலமைப்பரிசில்களும் கிடைக்கப்பெறுவதுடன், இவற்றை விட ஏனைய புலமைப்பரிசில் வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறுகின்றன. வரையறைகளைத் தாண்டி, தமது ஆற்றலை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களை நாடுகின்ற மாணவர்கள் SLIIT வழங்கும் வலுவான கற்றல் சமூகம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். apply.sliit.lk மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். கற்கைநெறிகள், விண்ணப்பிப்பதற்கான தேவைப்பாடுகள், மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்த தகவல் விபரங்களை எந்தவொரு SLIIT பல்கலைக்கழகத்திற்கும் நேரடியாக வருகை தந்தோ, அல்லது +94 11 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ அல்லது www.sliit.lk என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது info@sliit.lk மின்னஞ்சல் முகவரியூடாகவோ அறிந்து கொள்ள முடியும்.

