Jan 19, 2026 - 04:28 PM -
0
தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
--

