உலகம்
சீனாவில் மீண்டும் குறைந்த பிறப்பு விகிதம்!

Jan 19, 2026 - 05:25 PM -

0

சீனாவில் மீண்டும் குறைந்த பிறப்பு விகிதம்!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிட்ட வகையில் குறைந்து வந்ததால், ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நடவடிக்கையை நீக்கி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. என்றாலும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதனால் இரண்டு குழந்தைகள் பெற்றக்கொள்ளும் தம்பதிக்கு அரசு சலுகைகள் வழங்கும் எனவும் தெரிவித்தது. அதற்கு பலனில்லை. 

இதன்காரணமாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் இந்தியாவைவிட பின்தங்கியது. 

கடந்த 2024 ஆம் ஆண்டு பிறப்பு விகிதம் சற்று அதிகரித்தது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டு முந்தைய ஆண்டைவிட 17 சதவிதம் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. 2025 இல் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2024 ஆம் ஆண்டை விட 1.62 மில்லியன் குறைந்துள்ளது. 

2024 ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகையில் 3 மில்லியன் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி சீனாவில் மக்களை தொகை 1.404 பில்லியன் ஆகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05