சினிமா
கில்லியை காலி செய்த மங்காத்தா புக்கிங்!

Jan 19, 2026 - 06:10 PM -

0

கில்லியை காலி செய்த மங்காத்தா புக்கிங்!

அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான மங்காத்தா வருகிற ஜனவரி 23 ஆம் திகதி ரீ ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை திரையில் பார்த்து கொண்டாட அஜித் ரசிகர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். 

மங்காத்தா ரீ ரிலீஸ் ப்ரீ புக்கிங் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இதுவரை ரூபா 10 லட்சத்துக்கும் மேல் வசூல் வந்துள்ளது. இதனால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனையை மங்காத்தா ரீ ரிலீஸ் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் ப்ரீ புக்கிங்கிலேயே கில்லி ரீ ரிலீஸ் செய்த சாதனையை மங்காத்தா முறியடித்துள்ளது. அதாவது புக் மை ஷோ App இல் கில்லி படம் ஒரு மணி நேரத்திற்கு 4.2K டிக்கெட்ஸ் தான் புக் செய்யப்பட்டுள்ளது. 

இது தான் கில்லி ரீ ரிலீஸின் பீக் டைம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ரீ ரிலீஸ் ஆகும் மங்காத்தா ப்ரீ புக்கிங்கிலேயே கடந்த ஒரு மணி நேரத்தில் 4.31K டிக்கெட்ஸ் புக் செய்யப்பட்டுள்ளது. இதனால் கில்லி ரீ ரிலீஸ் சாதனையை மங்காத்தா முறியடித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05