Jan 20, 2026 - 12:25 PM -
0
கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்டப் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் டித்வா புயவினால் மண்சரிவு ஏற்பட்டது. இதன்போது மலையிலிருந்து உருண்டு வந்த பாரிய பாறை ஒன்று ஆலய வளாகத்தின் முன்பாக நின்றுள்ளது.
அதில் மாணிக்கக் கற்கள் பதிந்திருப்பதைப் போன்ற அடையாளங்கள் காணப்படுவதாகத் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கலஹா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
--

