Jan 20, 2026 - 01:56 PM -
0
ஹட்டன், குடாகம விநாயகர் புரம் பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று (19) இரவு, குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று குடியிருப்புக்கு அருகாமையில் வந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இரவு நேரங்களில் குடியிருப்புக்களுக்கு மிக அருகாமையில் வரும் இந்த சிறுத்தை, அங்குள்ள வளர்ப்பு நாய்களைத் தாக்கி வேட்டையாடி வருவதாகவும், பல நாய்களைக் காயப்படுத்திச் சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தை தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
--

