Jan 20, 2026 - 03:31 PM -
0
பேஸ்லைன் வீதி விரிவாக்கத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, கிருலப்பனை சந்தியில் இருந்து கொழும்பு - ஹொரணை வீதியின் துடுகெமுனு வீதி வரை 0.86 கிலோமீற்றர் தூரத்திற்கு 6 வழிச்சாலையை அமைப்பதற்கு 2009 நவம்பர் 11 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர், நாட்டின் தேசிய வீதிப் பிரதான திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதியாக இந்த வீதி அடையாளம் காணப்பட்டதுடன், இதற்காகத் தேவையான காணி சுவீகரிப்புப் பணிகள் தற்போது 90 வீதம் நிறைவடைந்துள்ளன.
இந்த வீதி நிர்மாணிக்கப்படுவதன் மூலம் கொழும்பு - ஹொரணை வீதியின் பயண நேரமும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நகர்ப்புற நடமாட்டம் மற்றும் பொருளாதார உற்பத்தித்திறன் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, பேஸ்லைன் வீதி விரிவாக்கத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

