Jan 20, 2026 - 04:18 PM -
0
நாரஹேன்பிட்ட பகுதியில் 'துசித ஹல்லொலுவ' என்பவரும் மேலும் இருவர் பயணித்த ஜீப் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) இரவு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க பகுதியில் கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

