செய்திகள்
பாட்டலி சம்பிக்கவின் விபத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

Jan 20, 2026 - 05:28 PM -

0

பாட்டலி சம்பிக்கவின் விபத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

2016 ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.

 

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதியரசர் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 

இதன்போது, வழக்கின் சாட்சிகள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

 

அதற்கமைய, மேலதிக சாட்சி விசாரணைகள் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி ஏற்படுத்திய விபத்தை மறைத்தமை மற்றும் சாட்சியங்களை அழித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி திலும் துசித குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05